வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

குணசேகரன் தலையில் இடியை இறக்கிய ஈஸ்வரியின் அப்பா.. மனுஷன் சொத்து போனதுக்கு கூட இந்த அளவுக்கு கலங்கலையே

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் தற்போது அதிரிபுதிரியாக ஆட்டம் சூடு பிடித்துக் கொண்டு வருகிறது. அதாவது குணசேகரன் கொஞ்சம் கொஞ்சமாக தோற்றுப் போன நிலையில் மொத்தமாகவே இவருடைய ஆட்டம் அடங்கப் போகும் நேரம் வந்துவிட்டது. என்னதான் சொத்து பின்னாடியே அலைஞ்சாலும் அது தன்னை விட்டுப் போன நேரத்தில் கூட இந்த அளவுக்கு குணசேகரன் கலங்கவில்லை.

ஆனால் தற்போது குணசேகரனின் ஜீவன் போகும் அளவிற்கு தலையில் ஒரு இடியை இறக்கி விட்டார் ஈஸ்வரியின் அப்பா. அதாவது குணசேகரன் வீட்டு மருமகள்கள் அனைவரும் ஜீவானந்தத்தை பார்ப்பதற்கு அவருடைய வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அந்த நேரத்தில் நந்தினி அப்பா நான் உன்னுடைய வீட்டிற்கு தான் வந்திருக்கிறேன் என்று தகவலை போன் மூலம் சொல்லிவிடுகிறார்.

Also read: திடீரென படுத்த படுக்கையான சக்தி.. உடைந்து போகும் ஜனனி, எதிர்நீச்சல் அதிரடி ட்விஸ்ட்

உடனே அங்கே இருந்து நந்தினி ,ரேணுகா வீட்டிற்கு கிளம்பி விடுகிறார்கள். அப்பொழுது நந்தினி அப்பா குணசேகரனிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஈஸ்வரியின் அப்பாவும் வந்து விடுகிறார். வழக்கம் போல் குணசேகரனுக்கும் இவருக்கும் வாக்குவாதம் துவங்கிய நிலையில் மொத்த உண்மையையும் போட்டு உடைத்து விடுகிறார்.

அதாவது ஈஸ்வரி கல்லூரியில் படிக்கும் போது அவளை எனக்கு பிடித்திருக்கிறது திருமணம் பண்ணி வையுங்கள் என்று ஒரு பையன் வந்து என்னிடம் கேட்டான். ஆனால் நான் அப்பொழுது புத்தி பேதலித்து போய் அவனை விட்டுவிட்டு உனக்கு திருமணத்தை பண்ணி வைத்தேன். அந்தப் பையன் எவ்வளவு நல்லவன் என்று இப்பொழுது தான் எனக்கு புரிகிறது என சொல்கிறான்.

Also read: நிஜத்திலும் நாக்கில் நாட்டியம் ஆடிய சனி பகவான்.. எதிர்நீச்சல் குணசேகரனுக்கு வந்த வக்கீல் நோட்டீஸ்

உடனே இப்ப எதுக்கு அந்த பேச்சை ஆரம்பிக்கிறீங்க என்று குணசேகரன் அம்மா கூறுகிறார். ஆனாலும் விடாமல் என் மனசு கேட்கல அதனால் தான் புலம்பி தவிக்கிறேன் என்று ஈஸ்வரி அப்பா பேசுகிறார். அடுத்ததாக அந்தப் பையன் வேற யாரும் இல்ல இப்பொழுது உங்கள் கண்ணுல விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கின்ற ஜீவானந்தம் தான் என்று சொல்லிவிடுகிறார்.

இதைக் கேட்ட அதிர்ச்சியில் குணசேகரன் வெளியில் வந்து அப்படியே உட்கார்ந்து விடுகிறார். சும்மாவே இந்த மனுஷன் ஓவரா ஆடுவார், இதுல வேற காலில் சலங்கை கட்டி விட்டாச்சு சொல்லவா செய்யணும். இனி ஈஸ்வரியின் நிலைமை என்ன ஆகப் போகிறது. குணசேகரன் கண்டிப்பாக ஈஸ்வரியை வீட்டிற்குள் விடமாட்டார். வெளியே போக சொல்வது கூட வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் இந்த உண்மை இப்பொழுதே குணசேகருக்கு தெரிந்ததால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறது.

Also read: இனிமே ஒத்த கை குணசேகரன் தான் கூப்பிடுவாங்க.. எதிர்பாராத திருப்பங்களுடன் எதிர்நீச்சல்

- Advertisement -

Trending News