ரிலீஸின் போது யாரும் கண்டுக்கல, பின் வித்தியாசமான கதை கருவை கொண்ட 6 படங்கள்.. தேசிய விருதை வாங்கிய ஜோக்கர்

Best Story Tamil Movies: தற்போது தமிழ் சினிமாவிற்கு கமர்ஷியல் படங்கள் தொடர்ந்து வெளியாகி 100 கோடியை அசால்ட்டாக தட்டி தூக்குகிறது. தரமான கதை களத்தில் இதுவரை பார்த்திடாத ஸ்டோரியை கொண்ட படங்கள் வரும்போது யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் படத்தை பார்த்தபின் தலையில் வைத்து கொண்டாடிய மாறுபட்ட கதை கரு கொண்ட 6 படங்களை பற்றி பார்ப்போம். அதிலும் ஜோக்கர் வசூலில் கல்லா கட்டா விட்டாலும், தேசிய விருதை பெற்ற பெருமைக்குரிய படமாகும்.

ஜிகர்தண்டா: மதுரையை கதைக்களமாகக் கொண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தினை கார்த்திக் சுப்புராஜ் வித்தியாசமான கோணத்தில் இயக்கினார். இதில் அசால்ட் சேதுவாக பாபி சிம்ஹாவும், இயக்குனர் கார்த்திக் என்ற கேரக்டரில் சித்தார்த்தும் நடித்தனர். இயக்குனர் கார்த்திக் மதுரையில் வாழும் ரவுடியான அசால்ட் சேதுவின் வாழ்க்கையை அவருக்குத் தெரியாமலேயே அறிந்து கொண்டு, அந்த படத்தை படமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். இது எப்படியோ அசால்ட் சேதுபதி-க்கு தெரிந்து விட, அவரே அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார்.

இதை மறுக்க முடியாத இயக்குனரும் வேறு வழி இல்லாமல் அந்த படத்தை எடுத்து முடிக்கிறார். படம் வெளியாகும் போது சேதுபதியை ஒரு ரவுடியாக சித்தரிக்காமல் அவரை ஒரு அட்டகத்தியாக காட்டி நகைச்சுவை கதாபாத்திரமாக்கி விடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த சேது கார்த்தியை கொல்ல துடிக்கிறார். ஆனால் பின்னர் ஏற்பட்ட மனமாற்றத்தால் சேது கார்த்திக்கை மன்னித்து, தன்னுடைய தொழிலையும் விட்டுவிட்டு கதாநாயகன் ஆகிறார். அதே சமயத்தில் அதை இயக்கிய இயக்குனர் கார்த்திக்கோ டாப் நடிகர்களின் படங்களின் கால்ஷீட்டை கத்தி முனையில் வாங்கி படத்தை எடுக்கும் ரவுடியாக மாறி விடுகிறார்.

இதுதான் ஜிகர்தண்டா படத்தின் முழு கதை. ஆனால் இந்த படம் ரிலீஸ் ஆனபோது தொடக்கத்தில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் படம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டதால் அடுத்தடுத்த நாட்களில் ரசிகர்கள் படத்திற்கு ஆதரவு கொடுத்தனர். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமும் விறுவிறுப்பாக தயாராகிக் கொண்டிருக்கிறது.

Also Read: நக்கல், நையாண்டிக்கு பெயர் போன 5 நடிகர்கள்.. 6 மணிக்கு மேல் மணிவண்ணனுடன் எடுக்கும் அவதாரம்

ஆரண்ய காண்டம்: அறிமுக இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஆரண்ய காண்டம். இந்த படத்தின் கருவானது ஆறு பேரின் ஒரு நாள் வாழ்க்கையை சொல்லும் வகையில் அமைந்திருக்கும். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்தார். இந்த படத்திற்கு சிறந்த பட தொகுப்பிற்கான தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த படம் ரிலீஸ் ஆனபோது சுத்தமாகவே யாரும் கண்டு கொள்ளவில்லை.

ஜோக்கர்: குக்கூ புகழ் ராஜு முருகன் எழுதிய இயக்கிய ஜோக்கர் படத்தில் குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், காயத்ரி கிருஷ்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்தப் படத்தில் மன்னார் மன்னன் என்பவர் தன்னை ஒரு இந்தியாவின் ஜனாதிபதியாக அறிவித்துக் கொள்ளும் கிராமத்து வாசியாக இருக்கிறார். அவர் தனது கிராமத்தை சுற்றி நடக்கும் பல்வேறு அநீதிகளுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்துகிறார். இவர் என்னதான் புரட்சிகரமான விஷயத்தை பேசினாலும் அவரை ஜோக்கர் ஆகவே பார்க்கின்றனர்.

நியாய, தர்மத்திற்காக போராடும் சாமானிய மனிதன், வேஷம் போடாமல் உண்மையாக வாழும் போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறார் என்பதை இந்த படம் காட்டியிருக்கும். இதில் மன்னார் மன்னனாக குரு சோமசுந்தரம் சிறப்பாக நடித்தார். இந்தப் படத்தின் கதைகாகவே தேசிய விருதும் கிடைத்தது. ஆனால் இவ்வளவு தரமான கதைகளத்தை கொண்ட இந்த படம் வெளிவந்தது கூட யாருக்கும் தெரியாது.

Also Read: பார்த்திபனுக்கு அசிஸ்டெண்டாக இருந்து வெற்றி பெற்ற 3 இயக்குனர்கள்.. வாண்டெட் லிஸ்டில் யாரு தெரியுமா?

அருவி: அறிமுக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படம் அருவி. இந்த படத்தில் இளம் பெண்ணான அருவி பொருளாதார சமூக நுகர்வியல் சூழலில் சமுதாயத்தில் தன்னை பொருத்திக் கொள்வதில் எவ்வளவு சிரமங்களை அனுபவிக்கிறார் என்பதை காட்டுகிறது. இவர் வேலைக்கு செல்லும் இடத்தில் அவரை வயது வித்தியாசம் பார்க்காமல் அனுபவித்து விடுகிறார்கள். அவர்களை எல்லாம் பழிவாங்கும் விதமாக தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக தொலைக்காட்சியில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிக்கு வரவழைத்து திக்குமுக்காட வைக்கிறார்.

கடைசியில் அவர் தனக்கு எய்ட்ஸ் இல்லை என்றும் ஒரு பெண் சமுதாயத்தால் எவ்வளவு கடுமையான வேதனைகளை சந்திக்கிறார் என்பதை அந்த நிகழ்ச்சியின் மூலம் காட்டுவதற்காகவே வந்ததாகவும் சொல்கிறார். இந்த படம் நிஜமாகவே வித்தியாசமான கதையாக இருக்கிறதே என்று பார்ப்போம் அனைவரும் சொல்லும் அளவுக்கு இருக்கும். ஆனால் இந்த படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைக்காவிட்டாலும், நேர்மறையான விமர்சனங்கள் குவிந்தது.

மண்டேலா: மடோன் அஸ்வின் எழுதி, இயக்கிய படம் தான் மண்டேலா. இந்த படத்தில் யோகி பாபு முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்தார். இதில் 100 பேர் வாழக்கூடிய சிறிய கிராமத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகளால் ஒரு மனிதனை அடிமை போல் நடத்துகின்றனர். அதிலும் அவருக்கு உருப்படியான பெயர் கூட இருக்காது. அப்படிப்பட்டவரின் வாக்குரிமை தான் அந்த கிராம ஊராட்சி தலைவர் பதவியை தீர்மானிக்கும் என்றதும் அவருக்கு வேண்டியதை அனைத்தையும் செய்கின்றனர்.

கடைசியில் அவருக்கு மண்டேலா என பெயர் வைக்கப்பட்டு, அவரையும் ஒரு மனிதன் போல் ஊர்மக்கள் மதிக்கும் அளவுக்கு இயக்குனர் இந்த படத்தில் தரமான சம்பவத்தை செய்துள்ளார். இந்த படத்தின் கதை கரு வித்தியாசமாக இருந்ததால் ரசிகர்களின் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

Also Read: 60 ரூபா டிக்கெட்டுக்கு 130 ஸ்னாக்ஸ் கட்டாயமா வாங்கணும்.. பகல் கொள்ளை, வெளிச்சத்துக்கு கொண்டு வந்த K.ராஜன்

ஒத்த செருப்பு: ஒற்றை ஆளாக இருந்து கொண்டு அவர் செய்த கொலைகளை போலீஸ் இடம் விவரிப்பதே ஒத்த செருப்பு படத்தின் கதை கரு. இந்தப் படத்தை பார்த்திபன் எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்து வெளியிட்டார். இதில் மாசிலாமணி கேரக்டரில் பார்த்திபன் நடித்தார். இவர் போலீஸ் விசாரணையில் தான் செய்த கொலைகளை எல்லாம் திகிலுடன் சொல்வது ரொம்பவே வித்தியாசமாக இருக்கும். இந்த படம் ரிலீஸ் ஆன போது யாருமே கண்டுகொள்ளவில்லை.

ஆனால் படத்தின் கதை தரமாக இருந்ததால் சர்வதேச அளவில் பலமொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ரிலீஸ் ஆனது. அதுவும் ஹிந்தியில் அமிதாப்பச்சனை வைத்து ரீமேக் செய்யப்பட்டு பார்த்திபன் இயக்கினார். அத்துடன் இந்த படம் இந்தோனேசிய மொழியிலும் ரீமிக்ஸ் செய்யப்பட்டது. இந்தோனேசிய மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் ஒத்த செருப்பு பெற்றது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்