நக்கல், நையாண்டிக்கு பெயர் போன 5 நடிகர்கள்.. 6 மணிக்கு மேல் மணிவண்ணனுடன் எடுக்கும் அவதாரம்

Funny actors: சில நடிகர்கள் சூட்டிங் முடிந்த பிறகு சாயுங்காலம் ஆறு மணி ஆனவுடன் எந்த வேலையாக இருந்தாலும் அதை நிறுத்திவிட்டு, இதை தான் நாங்கள் பண்ணுவோம் என்று சபதம் எடுத்து சில வேலைகளை செய்து இருக்கிறார்கள். அதாவது ஆறு மணிக்கு மேல் இவர்கள் ஐந்து பேரும் சேர்ந்தால் அவர்கள் எடுக்கக்கூடிய அவதாரமே வேறு என்று சொல்லும் அளவிற்கு சீட்டாட்டம், தண்ணீ என செம ஜாலியாக இருப்பார்களாம். அத்துடன் சூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவர்களையும் மோசமாக கலாய்த்து தள்ளி விடுவார்கள். அந்த நடிகர்களைப் பற்றி பார்க்கலாம்.

பார்த்திபன்: இவர் பெயர் கேட்டாலே நம்முடைய ஞாபகத்துக்கு வருவது புரியாத புதிர். முக்கால்வாசி இவர் என்ன பேசுகிறார் எதைப் பற்றி பேசுகிறார் என்பதை புரிந்து கொள்வது நமக்கு மிகவும் கடினமானது. அந்த அளவுக்கு சில விஷயங்களை உள்குத்தாக பேசக்கூடியவர். அப்படிப்பட்ட இவர் சாயுங்காலம் ஆறு மணி ஆனதும் படப்பிடிப்பில் இருப்பவர்களுடன் சீட்டு ஆடிக்கொண்டு ஜாலியாக பொழுதை கழிப்பார்.

Also read: மணிவண்ணன் இயக்கத்தில் 25 படங்கள் நடித்த ஒரே ஹீரோ.. என்றுமே மறக்க முடியாத 6 ஹிட் படங்கள்

சத்யராஜ்: இவருடைய படங்களில் தனி காமெடியன் என்று ஒருவர் தேவையே இருக்காது. ஏனென்றால் அந்த அளவிற்கு இவருடைய பேச்சு மற்றும் எதார்த்தமான நடிப்பு அனைத்தையும் இவர் ஒருவரே செய்து மக்களை கவர்ந்திருக்கிறார். அதிலும் இவரிடம் இருக்கும் லொள்ளு மற்றும் குசும்பு ரசிகர்களிடம் அதிக வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் படப்பிடிப்பின் போது மற்றவர்களை நக்கல் அடிப்பதையே வேலையாக செய்து வருவார்.

கவுண்டமணி: என்னதான் காமெடிக்கு மன்னனாக இருந்தாலும் இவருக்கு செந்தில் இல்லை என்றாலே முக்கால்வாசி எந்த வேலையும் ஓடாது. படத்தில் மட்டும் மற்றவர்களை ஓட்ட மாட்டார் சூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவர்களையும் நக்கல் அடித்து கொண்டிருப்பார்.

Also read: வெளிப்படையாய் உண்மையை தைரியமாக பேசும் 6 நடிகர்கள்.. எல்லா மேடைகளிலும் அடித்து நொறுக்கும் சத்யராஜ்

நெப்போலியன்: ஆரம்பத்தில் வில்லனாக சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்து, அடுத்து ஹீரோ மற்றும் குணசித்திர நடிகராகவும் நடித்து ரசிகர்களின் மனதில் இவருக்கு என்று ஒரு இடத்தை பிடித்து விட்டார். அப்படிப்பட்ட இவர் 6 மணிக்கு மேல் வேறொரு அவதாரத்தை எடுத்துக்கொண்டு படப்பிடிப்பில் இருப்பவர்களை மோசமாக கலாய்த்து வருவார்.

மணிவண்ணன்: தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் என பன்முகத் திறமையை கொண்டவர்களில் மணிவண்ணனும் ஒருவர். இவரிடம் இருக்கும் மிகப்பெரிய சிறப்பு இவருடைய எதார்த்தமான பேச்சு. அதிலும் இவரும் சத்யராஜும் சேர்ந்தால் அந்தப் படம் நக்கல் நையாண்டி இல்லாமல் இருக்காது. அப்படிப்பட்ட இவர், படப்பிடிப்பை முடித்த கையுடன் செய்வது சூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவர்களுடன் சேர்ந்து தண்ணீர் அடிப்பது தான்.

Also read: மறக்க முடியாத கஸ்தூரிராஜாவின் 6 படங்கள்.. நெப்போலியன் , ராஜ்கிரணுக்கும் கொடுத்த திருப்புமுனை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்