புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

முன்னணி கிரிக்கெட் வீரர்களின் சம்பள பட்டியலை வெளியிட்ட BCCI.. ரவீந்திர ஜடேஜாவிற்கு கிடைத்த வெகுமதி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ வருடாந்திர தக்க வைப்பு ஒப்பந்தங்களில் முன்னணி கிரிக்கெட் வீரர்களின் சம்பள பட்டியலை வெளியிடும். அப்படி இந்த வருடத்திற்குரிய சம்பள பட்டியலில் ஜடேஜாவிற்கு மிகப்பெரிய வெகுமதியை அளித்துள்ளது.

டீம் இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல் ரவுண்டராக கலக்கி கொண்டிருக்கும் ரவீந்திர ஜடேஜாவிற்கு காயம் ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்து தற்போது சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். இவருக்கு ஏற்பட்ட காயத்தால் ஆஸ்திரேலியா நடந்த 2022 டி20 உலக கோப்பையை இழக்க நேரிட்டது.

Also Read: இந்திய அணியை கெடுத்து குட்டி சுவராக்கிய 5 செலக்டர்ஸ்.. கோலிக்கு ஜால்ரா போடும் தகுதியே இல்லாத ராஜாங்கம்

அதன் பிறகு சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரில் ஜடேஜா தான் ‘பிளேயர் ஆப் தி மேட்ச்’ விருதைப் பெற்றார். அதுமட்டுமல்ல இந்திய அணி தொடரை 2-1 என கைப்பற்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற ஜடேஜா தான் முக்கிய காரணமாக இருந்தார்.

இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் பிசிசிஐ ஜடேஜா-விற்கு கொடுக்கும் வெகுமதியாக ரூபாய் 7 கோடி ஒப்பந்தத்துடன் A+ பிரிவுக்கு அவரை மாற்றி உள்ளது. இந்த பிரிவில் ஏற்கனவே ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோர் உள்ளனர்.

Also Read: சுண்டி இழுக்கும் அழகை கொண்ட 5 கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள்.. அசிங்கமாய் ஜொள்ளு விட்டு கேவலப்பட்ட வர்ணனையாளர்

அதே போல் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் ரூபாய் 5 கோடி பதவி உயர்வுடன் A பிரிவுக்கு முன்னேறினார். மேலும் இந்திய அணியின் தொடக்க ஆட்டநாயகரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டனுமான கேஎல் ராகுல் தொடர்ந்து மோசமாக செயல்பட்டதால் 3 கோடி ஒப்பந்தத்துடன் B பிரிவுக்கு தரமிறக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு A+ பிரிவில் 7 கோடி, A பிரிவில் 5 கோடி, B பிரிவில் 3 கோடி மற்றும் C பிரிவில் 1 கோடி என நான்கு குழுக்களில் 26 முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ சம்பள பட்டியலை தாக்கல் செய்துள்ளது. இந்த பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமார் மற்றும் அஜிங்க்யா ரஹானே மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: கிரிஷ் கிரைன்ஸ்சை மண்டையை சொரியவைத்த டிராவிட்.. 17 ஆண்டுகளுக்குப் பின் பரம ரகசியத்தை போட்டு உடைத்த சச்சின்

- Advertisement -

Trending News