fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சோசியல் மீடியாவை ஆட்டிப்படைத்த அமீரின் கதை.. வாழ்க்கையை மாற்றிய குழந்தைகளின் புகைப்படம்

amir-bb5-story

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சோசியல் மீடியாவை ஆட்டிப்படைத்த அமீரின் கதை.. வாழ்க்கையை மாற்றிய குழந்தைகளின் புகைப்படம்

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி துவங்கப்பட்ட முதல்வாரத்தில் போட்டியாளர்களுக்கு ‘கடந்து வந்த பாதை’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு, வீட்டில் உள்ள அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை மற்ற போட்டியாளர்கள் இடம் பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே வந்த சஞ்சீவ் மற்றும் அமீர் இருவருக்கும் கடந்து வந்த பாதை என்ற டாஸ்க் மீண்டும் கொடுக்கப்பட்டது.

எனவே நேற்றைய நிகழ்ச்சியில் தன்னைப்பற்றி பகிர்ந்து கொண்ட அமீர் மிகவும் உருக்கமான பல கதைகளை பேசி உள்ளார். ஏனென்றால் ஊட்டியில் அம்மா அண்ணனுடன் மிகவும் ஏழ்மையான நிலைமையில் தம்முடைய வாழ்க்கையை வாழ்ந்த அமீர், அம்மாவின் கண்டிப்பில் வளர்ந்ததாகவும், அதன்பிறகு ஊட்டியில் அவருடைய அண்ணனின் ஒரு சில நடவடிக்கை அம்மாவுக்கு பிடிக்காததால் அங்கிருந்து கிளம்பி கோவைக்கு அமீர் மற்றும் அவருடைய தாய் வந்துள்ளனர்.

கோயமுத்தூரில் அமீரின் பெரியம்மா வீட்டில் தங்கி படித்துக்கொண்டிருந்த அமீர், கொஞ்சம் ரவுடி தனமான பழக்கவழக்கத்தில் ஈடுபட்டார். அதன் காரணமாகவே அவருடைய அம்மாவை விட்டு பிரிந்ததாகவும் கண்ணீருடன் பதிவிட்டார். ஒரு நாள் இரவு முழுவதும் வீடு திரும்பாத அம்மாவைத் தேடி தருமாறு போலீசாரிடம் அமீர் புகார் அளித்துள்ளார்.

அதன் பிறகு ஏரி அருகே அமீரின் தாய் கொலை செய்யப்பட்டார். அவர் ஏன் கொலை செய்யப்பட்டார்? என்ற காரணத்தை அமீர் சொல்ல தயாராகவில்லை. ஆனால் கொலையாளி மட்டும் அமீரின் கண் முன்பு தான் இருந்தாராம். போலீஸ் விசாரணையில் அமீரில் தாயை எவ்வாறு கொலை செய்தேன் என்பதை எல்லாம் விலாவரியாக விளக்கியபோது, அமீர் அந்த இடத்தில்தான் இருந்தாராம்.

amir-mom

amir-mom

பின்பு அமீருக்கு சின்ன வயதில் இருந்தே ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அவருடைய அம்மாவிற்கு அமீர் நடனத்தின் மூலம் பேரும் புகழும பெற வேண்டும் என்று ஆசைப்பட்டார். அம்மா இறந்த பிறகு மீண்டும் கல்லூரிக்கு சென்று படிப்பைத் துவங்கிய அமீர், அங்கு நடந்த நடன போட்டியின் மூலம் முதல் பரிசை வென்றார். அவரிடம் இருக்கும் நடனத் திறமையை அப்போது புரிந்து கொண்ட அமீர், ராணுவத்தில் சேர வேண்டும் என்ற முடிவை மனதில் இருந்து அழைத்து விட்டார்.

பின்பு ஊட்டிக்கு திரும்பிய அமீர், மீண்டும் பெரியம்மா வீட்டில் இருந்து கொண்டு சிறிய நடனப் பள்ளியை துவங்கினார். அப்போது அந்தப் பள்ளியில் சேர்ந்த அலைனா என்ற குழந்தைதான் அவருடைய வாழ்க்கையையே மாற்றி விட்டாராம்.  அலைனாவின் பெற்றோர் சைஜி-அஷ்ரப் தம்பதியர் அமீரை தங்களது குடும்பத்தில் ஒருவராகவே நினைத்தனர்.

bb5-amir-cinemapettai

bb5-amir-cinemapettai

மேலும் அமீர், லிங்க் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று 24 மணி நேரம் நடனமாட வேண்டும் என முயற்சி செய்தல் 10:45 மணி நேரம் நடனம் ஆடினாராம். அதன்பிறகு அவருடைய உடலில் போதிய வலிமை இல்லை என்பதை மருத்துவர் கூறியதை அறிந்த அலைனாவின் பெற்றோர், தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்று அமீரை தங்களில் ஒருவராகவே பார்த்துக் கொண்டனராம். இதனால் கிறிஸ்தவரான அமீர் முஸ்லிமாக மாறிவிட்டார்.

ஆனால் அமீருக்கு அங்கு இருக்கும் போது கொஞ்சம் தயக்கமாகவே இருக்குமாம். ஏனென்றால் மற்றவர் வீட்டில் திடீரென்று பழகுவது கொஞ்சம் கடினம் தானே. சாப்பிடுவதற்கு வெளியில் வருவதற்கும் அமீருக்கு கொஞ்சம் தயக்கமே இருந்ததாம். அந்த வீட்டில்தான் அமீர் முட்டையை பார்த்தாராம். அந்த அளவிற்கு அமீர் தன்னுடைய எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். எப்பொழுதும் அவருடைய வீட்டில் தக்காளி சாதம் தக்காளி ரசம் தான், சில சமயம் அவருடைய அம்மா மாமிசமும் முட்டையையும் சமைப்பாராம். ஆனால் அலைனா வீட்டில் எப்போதும் எல்லாமுமே இருப்பது அமீருக்கு வியப்பை ஏற்படுத்தியது.

amir-bb5

amir-bb5

பின்பு விஜய் டிவியில் நுழையவேண்டும் என்ற ஆசையில், ‘உங்களில் யார் பிரபுதேவா’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தீவிரமாக முயற்சி செய்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற, ‘கிங்ஸ் ஆப் டான்ஸ்’ என்பதில் அமீர் டைட்டில் வின்னர் ஆனார்.  சைஜி உடைய குழந்தைகளுக்கு, அமீர் தனக்குத் தெரிந்த நடனத்தை சொல்லிக்கொடுத்து அவர்கள் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘டான்ஸ் வெர்சஸ் டான்ஸ்’ இந்த நிகழ்ச்சியில் ஆடிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் தான் தற்போது அமீரின் குடும்பம் என்று சோசியல் மீடியாவில் தற்போது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top