வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

திருமண உறவை பார்த்து பயப்படும் நித்யா மேனன்.. காரணத்தை அம்பலப்படுத்திய பயில்வான்

Nithya Menon: கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் நிறைய நடிகைகள் படையெடுத்த நிலையில் அதில் முக்கியமாக நித்யா மேனன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். அந்த வகையில் விஜய், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். அதுவும் தனுசுடன் இவர் நடித்த திருச்சிற்றம்பலம் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ரசிகர்களால் தாய் கிழவியாக பார்க்கப்படும் நித்யா மேனன் 33 வயதாகியும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே சுற்றி வருகிறார். இதற்கான காரணம் என்ன என்பதை பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அதாவது நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை வெட்ட வெளிச்சம் ஆக்கி வருகிறார் பயில்வான்.

இந்த சூழலில் பல நடிகைகளின் வாசாப்பை வாங்கிய பயில்வான் தொடர்ந்து இதே வேலையை செய்து வருகிறார். இந்நிலையில் 35 வயதாகியும் நித்யா மேனன் திருமணம் செய்து கொள்ளாததற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். சமீபத்தில் கேரளாவில் பிரபல நடிகைகள் திருமணம் செய்த சில வருடங்களிலேயே திடீரென தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு காரணம் கேரளாவில் வரதட்சணை அதிகமாக வாங்கப்படுகிறது. மன உளைச்சல் காரணமாகத்தான் நடிகைகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கேரளா அரசே அதிகமாக வரதட்சனை வாங்க கூடாது என உத்தரவிட்டுள்ளது. மேலும் இப்போது பெரும்பாலான கேரளா இளைஞர்கள் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து கொள்ள முன் வந்திருக்கிறார்கள்.

ஆகையால் தனக்கும் வரதட்சணை கொடுமை நேர்ந்துவிடுமோ என்ற பயத்தில் தான் நித்யா மேனன் திருமணத்தை தள்ளிப் போடுவதாக பயில்வான் கூறியிருக்கிறார். இது தவிர மற்றொரு காரணமும் இருக்கிறது. அதாவது ஹீரோயின் என்றாலே மெலிந்த தேகத்துடன் தங்களை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள பல முயற்சிகளை மேற்கொண்டு வருவார்கள்.

ஆனால் நித்யா மேனன் இதில் விதிவிலக்காக இருக்கிறார். ஆகையால் அவருடைய உடல் எடை அதிகமாக இருப்பதனால் கூட திருமணம் தடைப்பட்டு போக வாய்ப்பு இருக்கிறது என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். ஆனால் நித்யாமேனன் பப்ளியாக இருப்பது தான் அவருக்கு அழகு என அவரது ரசிகர்கள் பயில்வான் பேச்சுக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

Trending News