கோபியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய பாக்கியா.. மகனை நம்பிப்போன ஈஸ்வரிக்கு கிடைத்த தண்டனை

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி மீது முழு நம்பிக்கையும் பாசத்தையும் கொட்டி தீர்த்த ஈஸ்வரி தற்போது ஏமாற்றத்தில் நிலை குலைந்து போய் நிற்கிறார். அதாவது என்னதான் பாக்கியா பார்த்து பார்த்து செய்தாலும் ஈஸ்வரி மகன் கோபிக்கு தான் அதிக சப்போர்ட் செய்து வந்தார். அந்த வகையில் ராதிகா கர்ப்பமாகி இருக்கிறார் என்று தெரிந்தும் கோபிக்கு ஆதரவாக நின்னு கோபி கூப்பிட்டதும் ராதிகா வீட்டிற்கு ஈஸ்வரி போட்டார்.

ஆனால் போன நாளிலிருந்து அங்கே ஈஸ்வரி அவமானப்பட்டு அசிங்கப்பட்டு தான் இருந்தார். இருந்தாலும் அவ்வப்போது கோபி செண்டிமெண்டாக பேசி ஈஸ்வரியை அங்க தங்க வைத்து விட்டார். அந்த வகையில் எதேர்ச்சியாக நடந்த ஒரு விபத்தினால் ராதிகா வயிற்றில் இருந்த குழந்தை கலைந்து விட்டது. ஆனால் இதற்கு காரணம் உங்கள் அம்மா தான் என்று கோபியிடம் ராதிகா சொல்லிவிட்டார்.

ரெண்டு கெட்ட நிலைமையில் இருக்கும் கோபி

அது மட்டுமில்லாமல் ராதிகா அம்மாவும் கோபியிடம் சண்டை போட்டு ஈஸ்வரியை பற்றி குறை சொல்லிவிட்டார். இதெல்லாம் தொடர்ந்து ராதிகா நாங்கள் எங்களுடைய கிராமத்திற்கு போகிறோம் என்று கோபியை பிளாக்மெயில் பண்ணி விட்டார். இதனால் ராதிகா இல்லாமல் நாம் எப்படி இருப்பது என்ற பயத்தினால் கோபி வீட்டிற்கு வந்து ஈஸ்வரியை ரொம்பவே திட்டி விட்டார்.

அத்துடன் அவமானப்படுத்தி வீட்டை விட்டு வெளியே போக வைத்து விட்டார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஈஸ்வரி நொந்து மனவேதனையில் பெட்டி படுக்கையை எடுத்துவிட்டு வெளியே வந்து விட்டார். அப்பொழுது வழக்கம் போல் பாக்கியலட்சுமி, மாமியாரை பார்த்து அரவணைத்து வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார்.

வீட்டிற்கு வந்த ஈஸ்வரி, கணவர் மற்றும் பாக்யாவிடம் புலம்புகிறார். நான் குழந்தையே கலைக்க வேண்டும் என்பதற்காக அப்படி ஒரு காரியத்தை பண்ணுவேனா. என்னை நம்பாமல் சந்தேகப்பட்டு விட்டான் கோபி என்று மனவேதனையில் புலம்புகிறார். பிறகு பாக்யா, மாமியாருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்புகிறார். அங்கே வந்த கோபியிடம் பாக்கியா என்ன விட உங்க அம்மாவை உங்களுக்கு தான் தெரியும்.

அப்படி இருக்கும் பொழுது எப்படி நீங்கள் அந்த ஒரு காரியத்தை உங்க அம்மா பண்ணி இருப்பார்கள் என்று நம்பி இந்த அளவுக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறீர்கள் என்று கோபியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார். இதனால் ரெண்டு கெட்ட நிலைமையில் கோபி யார் பக்கம் சாய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறார். கடைசியில் மகனை நம்பி போன ஈஸ்வரிக்கு ஏற்பட்ட அவமானம் மிகப்பெரிய தண்டனையாக அமைந்துவிட்டது.

இனியாவது பாக்கியாவின் மனசையும் வாழ்க்கையும் புரிந்து கொண்டு ஒரு நல்லதை ஏற்படுத்தும் வகையில் ஈஸ்வரி செயல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கோபிக்கு ஒரு கட்டத்தில் அம்மா மீது எந்த தவறும் இல்லை என்று தெரிய வந்த பிறகு தான் ராதிகா மற்றும் அவருடைய அம்மாவுக்கு மொத்தமாக இருக்கிறது. ஆனாலும் இந்த கோபி, ராதிகா இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று கடைசி வரை ராதிகாவுடன் கூட்டு சேர்ந்து பாக்கியாவை படாதபாடு படுத்தி எடுக்கப் போகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த முந்தைய சம்பவங்கள்

Next Story

- Advertisement -