ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியே துரத்திய கோபி.. ராதிகா நடத்திய நாடகத்தில் பலிகடாக சிக்கிய மாமியார்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகா கால் தடுக்கி கீழே விழுந்து அடிபட்டதால் வயிற்றில் இருந்த குழந்தை கலைந்து விட்டது. ஆனால் இதற்கு காரணம் உங்க அம்மா தான் என்று கோபியிடம் கூறுகிறார். என்னை பின்னாடியில் இருந்து தள்ளி விட்டதும் உங்க அம்மா தான் என்று ராதிகா மற்றும் அவருடைய அம்மா கோபி இடம் சொல்கிறார்கள்.

இதனால் கோபி, அம்மா என்று கூட யோசிக்காமல் ஈஸ்வரியை வாய்க்கு வந்தபடி திட்டி விட்டு வன்மத்தை மொத்தமாக கொட்டி விடுகிறார். இதனால் நொந்து போன ஈஸ்வரி பித்து பிடித்தது போல் புலம்பிக் கொண்டே வீட்டிற்கு போகிறார். இதற்கு இடையில் மாமியாருக்கு என்ன ஆச்சு என்று தெரியாமல் பாக்யா ரொம்பவே கவலையில் இருக்கிறார்.

ஈஸ்வரியை நோகடித்து வெளியே அனுப்பிய கோபி

பிறகு ராதிகா வீட்டிற்கு வந்த பாக்யா, மாமியாரை பார்த்து பேசுகிறார். அப்பொழுது ஈஸ்வரி ஒன்னும் பிரச்சினை இல்லை நான் பார்த்துக் கொள்கிறேன் நீ வீட்டுக்கு போ என்று பாக்யாவை அனுப்பி வைக்கிறார். அடுத்ததாக மருத்துவமனையில் இருக்கும் ராதிகா நான் இனி அந்த வீட்டிற்கு வர மாட்டேன். எங்க அம்மாவுடன் கிளம்பி எங்க சொந்த ஊருக்கே போகிறோம் என்று சொல்கிறார்.

அங்கே நான் வீட்டிலிருந்து வேலை பார்த்துக் கொண்டு என் மகளை அங்கு இருக்கும் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடுகிறேன் என்று சொல்கிறார். அப்பொழுது ராதிகா அம்மா, ஈஸ்வரி மீது தான் எல்லா தவறும் இருக்கிறது என்பது போல் கோபி மனதிற்குள் புதைத்து விடுகிறார். அதனால் உங்க அம்மா இருக்கும் அந்த வீட்டிற்கு நாங்கள் வரமாட்டோம்.

இன்னும் சொல்லப் போனால் உங்க அம்மா மீது நான் போலீஸில் கம்ப்ளைன்ட் கொடுத்தால் உங்க அம்மா ஜெயிலில் தான் இருக்க வேண்டும் என்று பிளாக்மெயில் பண்ணுகிறார். இதனை தொடர்ந்து கோபி, ராதிகாவை சமாதானப்படுத்தி வீட்டிற்கு கூட்டிட்டு போக வேண்டும் என்று கெஞ்சுகிறார். அதற்கு ராதிகா நான் வரவேண்டும் என்றால் உங்கள் அம்மாவை வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்று சொல்கிறார்.

உடனே கோபி நான் எப்படி எங்க அம்மாவை அனுப்ப முடியும், அவங்க எங்க போவாங்க என்று கேட்கிறார். அதற்கு ராதிகாவின் அம்மா அதுதான் அவங்களுடைய ஆசை மருமகள் பாக்யா வீடு இருக்குல்ல அங்க போகட்டும் என்று சொல்கிறார். இதை எல்லாம் கேட்ட கோபி, ராதிகாவிடம் எதுவாக இருந்தாலும் வீட்டிற்கு வா அங்க போய் பேசிக்கலாம் என்று சொல்கிறார்.

ஆனால் ராதிகா நீங்கள் எனக்கு இப்பொழுதே ஒரு முடிவை சொல்லுங்கள். உங்க அம்மா அந்த வீட்டில் இருந்தால் நான் அங்கே இருக்க மாட்டேன். அது மட்டும் இல்லாமல் இனி உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆகிவிடும் என்று சொல்கிறார். அதற்கு கோபி அப்படியெல்லாம் பேசாதே நான் இதற்கு ஒரு வழி பண்ணுகிறேன் என்று ராதிகாவை சமாதானப்படுத்தி வீட்டிற்கு கூட்டிட்டு போகிறார்.

அங்கே போனதும் கோபி, ஈஸ்வரியைத் திட்டி வெளியே அனுப்பப் போகிறார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஈஸ்வரி மனதார நொந்து வேதனைப்பட போகிறார். பிறகு பாக்கியா தான் ஈஸ்வரியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு கூட்டிட்டு வந்து ஆறுதல் படுத்தப் போகிறார். ஆக மொத்தத்தில் ராதிகா மற்றும் அவருடைய அம்மா சேர்ந்து நடத்திய நாடகத்தில் பளிகாடாக சிக்கிவிட்டார் கோபியின் அம்மா ஈஸ்வரி. ஆனால் இந்த உண்மையை அனைத்தும் ராதிகாவின் மகள் மயூ மூலம் ஆதாரத்துடன் தெரிய வரப்போகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -