மாமியார் மீது மொத்த பழியையும் போட்ட சக்காளத்தி.. கோபப்பட்ட கோபி, பாக்கியாவிடம் தஞ்சம் அடைந்த ஈஸ்வரி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், வேண்டாத மருமகள் கைபட்டால் குத்தம் கால் பட்டால் குத்தம் என்று சொல்வதற்கு ஏற்ப ஈஸ்வரி வீட்டிற்கு வந்ததால் ராதிகா மொத்தமாக கடுப்பில் இருக்கிறார். போதாக்குறைக்கு அம்மா மீது இருக்கும் பாசத்தால் கோபி ரொம்பவே மெனக்கெடு செய்து பாசமாக பார்த்துக் கொள்கிறார். அதனால் ராதிகாவை கண்டு கொள்ளாததால் இன்னும் உச்சகட்ட கோபத்தில் ராதிகா இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் பாக்கியாவின் மகள் இனியாவிற்கு பிறந்தநாள் வருகிறது. இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியை பாக்கியா, வீட்டில் வைத்துக் கொண்டாடுகிறார். ஆனால் இனியாவிற்கு அப்பா இன்னும் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கவலைப்பட்ட நேரத்தில் கோபிக்கு போன் பண்ணி என்னுடைய பிறந்த நாளை இன்று மறந்து விட்டீர்களா என்று கேட்கிறார்.

கீழே விழுந்த ராதிகா

உடனே கோபி மன்னிச்சிடு இனியா என்று சொல்லி பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்கிறார். அத்துடன் பாக்யா வீட்டிற்கு இனியாவிற்கு வாழ்த்து தெரிவிக்க நேரடியாக வருகிறார். அங்கே வந்ததும் பழனிச்சாமிக்கும் பாக்கியாவிற்கும் கல்யாணம் நடத்தி வைக்க பழனிச்சாமி அம்மா ஏற்பாடு பண்ணுகிறார் என்று தெரிந்ததும் பாக்கியவை ஹோட்டலில் போய் திட்டுகிறார்.

இதனால் பாக்கியவுக்கு தற்போது பழனிச்சாமி மீது சந்தேகம் வந்துவிட்டது. ஒருவேளை பழனிச்சாமி மனதிற்குள் இப்படி ஒரு நினைப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழ ஆரம்பிக்கிறது. இதனை தொடர்ந்து ராதிகா வீட்டில் இருக்கும் ஈஸ்வரிக்கும் ராதிகாவிற்கும் வழக்கம் போல் ஒத்துவரவில்லை. அந்த சமயத்தில் ஈஸ்வரிடம், இனி பாக்யா இங்கே வரக்கூடாது என்று ராதிகா பேசுகிறார்.

பிறகு பேசி விட்டு திரும்பும் பொழுது கால் தவறி கீழே விழுந்து விடுகிறார். இதனால் ராதிகாவின் கர்ப்பம் கலைந்து விடுகிறது. ஆனால் இதற்கு காரணம் உங்கள் அம்மா தான் என்று மொத்த பழியையும் ஈஸ்வரி மீது போடுகிறார். இதனைக் கேட்ட கோபியும் ராதிகா சொல்வதுதான் உண்மையாக இருக்கும் என்று நம்பி அம்மாவை சந்தேகப்பட்டு கோபமாக திட்டி விடுகிறார்.

இதனால் விரத்தியான ஈஸ்வரி, பாக்யாவின் வீட்டு வாசலில் போய் தஞ்சம் அடைந்து நிற்குதியாக நிற்கிறார். உடனே பாக்யா என்ன ஆச்சு என்று அத்தை கேட்கும் பொழுது ராதிகாவிற்கு கரு கலைந்து விட்டது. அதற்கு காரணம் நான் தான் என்று அனைவரும் நம்புகிறார்கள். அத்துடன் கோபியும் என் மீது சந்தேகப்பட்டு திட்டி விட்டான் என்று புலம்புகிறார். உடனே பாக்கியா, அத்தையே சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்துக் கொள்கிறார்.

ஆக மொத்தத்தில் ராதிகா இந்த வயதில் குழந்தை பெற்றுக் கொண்டால் நாடகம் இன்னும் சிரிப்பா சிரித்து விடும் என்பதினால் இயக்குனரே ராதிகாவிற்கு இந்த மாதிரி ஒரு காட்சியை கொடுத்து ஓரளவுக்கு பார்ப்பவர்களை ரிலாக்ஸ் பண்ணி விட்டார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த முந்தைய சம்பவங்கள்

Next Story

- Advertisement -