லியோ சக்ஸஸ் மீட்டிற்கு வராத சங்கீதா.! பயில்வான் கூறிய சீக்ரெட்டால் வெடிக்கும் சர்ச்சை

Vijay-Sangeetha: விஜய் நடிப்பில் கடந்த ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு லியோ படம் வெளியாகி இருந்தது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை வாரி குவித்து வந்தது. இந்த சூழலில் சமீபத்தில் நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ படத்தின் சக்சஸ் மீட் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டிருந்தது.

இதில் விஜய், திரிஷா, லோகேஷ் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆனால் விஜய்யின் மனைவி சங்கீதா இதில் கலந்து கொள்ளாதது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் சங்கீதா ஏன் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பதை பற்றி பேசியிருக்கிறார்.

அதாவது வாரிசு படத்தின் போதே விஜய் மற்றும் சங்கீதா இடையே பிரச்சனை போய்க்கொண்டு இருந்தது. ஏனென்றால் அப்போதே லியோ படத்தில் திரிஷா கமிட்டாகி இருக்கிறார் என்பதால் இது சங்கீதாவுக்கு பிடிக்கவில்லையாம். ஏனென்றால் ஆரம்பத்தில் திரிஷா மற்றும் விஜய் நடிப்பில் வெளியான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி வந்தது.

Also Read : ரஜினிக்கு ஒரு நியாயம், விஜய்க்கு ஒரு நியாயமா.? தளபதி சர்ச்சையில் சிக்க இதுதான் காரணம்

அப்போதே விஜய், திரிஷா இடையே கிசுகிசுக்கள் எழுந்தது. இதனால் த்ரிஷாவுடன் இனி நடிக்க கூடாது என சங்கீதா கண்டிஷன் போட்டிருந்தார். இதை இத்தனை வருடம் விஜய் கடைப்பிடித்து வந்த நிலையில் திடீரென லியோ படத்தில் திரிஷா தான் நடிக்க வேண்டும் என்று சொன்னதால் தளபதி வீட்டில் பிரச்சனை ஏற்பட்டதாக பயில்வான் கூறியிருந்தார்.

அதோடுமட்டுமல்லாமல் இதுவரை ரொமான்ஸ் காட்சிகளை தவிர்த்து வந்த விஜய் லியோ படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்திருந்தார். இதை பார்த்தவுடன் சங்கீதா இன்னும் காண்டாகி விட்டார் என்று பயில்வான் கூறியிருக்கிறார். இது குறித்து சங்கீதா விஜய் இடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருக்கிறார்.

ஆகையால் தான் இப்போ சக்சஸ் மீட்டில் சங்கீதா வரவில்லை. இவ்வாறு பயில்வான் கொளுத்தி போட்டு உள்ளதால் இது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. ஏனென்றால் தொடர்ந்து விஜய்யின் நிகழ்ச்சிகளை சங்கீதா தவிர்த்து வருகிறார். இருவரும் ஒருமுறை சேர்ந்து புகைப்படம் வெளியிட்டாலே மொத்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்தது போல் ஆகிவிடும்.

Also Read : விஜய்யின் அரசியல் வருகை குறித்து வெற்றிமாறனின் பதில்.. என்ன இப்படி சொல்லிட்டாரு?