விஜய்யின் அரசியல் வருகை குறித்து வெற்றிமாறனின் பதில்.. என்ன இப்படி சொல்லிட்டாரு?

Vijay-Vetrimaran: விஜய் இப்போது அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. அதற்கான வேலையில் தான் இப்போது படு பயங்கரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் விஜய் அரசியல் வருகை குறித்து பல பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் வெற்றிமாறன் இடமும் இது குறித்து கேட்கப்பட்டது.

வெற்றிமாறன் கடைசியாக சூரியை வைத்து விடுதலை படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் ஏக போக வரவேற்பு கொடுத்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது எடுத்து வருகிறார். அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு அடுத்தபடியாக சூர்யாவின் வாடிவாசல் படத்தை எடுக்க இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பே இப்படத்தின் அறிவிப்பு வெளியானாலும் சில காரணங்களினால் படப்பிடிப்பு தாமதமான நிலையில் இதற்கான பணி இப்போது தொடங்கப்பட்டிருக்கிறது. ஆகையால் விரைவில் வாடிவாசல் படப்பிடிப்பும் தொடங்க இருக்கிறது.

Also Read : விஜய் பட சைக்கோ நடிகருக்கு வந்த சிக்கல்.. அதிசய நோயினால் திக்குமுக்காடி அதிர்ச்சியில் உறைந்த படக்குழு

இந்த சூழலில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய வெற்றிமாறனிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இது அவர்களது தனிப்பட்ட விருப்பம் தான். ஆனால் அரசியலுக்கு வருவதற்கு முன் களத்தில் இறங்கி வேலை பார்ப்பது மிகவும் அவசியம்.

அதன் பிறகு அரசியலில் நுழைந்தால் நன்றாக இருக்கும். ஆகையால் விஜய்யும் முதலில் களத்தில் இறங்கி வேலை பார்த்து அதன் பின்பு அரசியலில் இறங்கினால் நன்றாக இருக்கும் என்பது போல வெற்றிமாறன் கூறி இருக்கிறார். பொதுவாக வெற்றிமாறனின் படங்கள் எடுத்துக் கொண்டாலே வித்தியாசமான கதைகளத்துடன் அரசியல் சார்ந்து இருக்கும்.

மேலும் இதுவரை விஜய் உடன் வெற்றிமாறன் கூட்டணி போடாத நிலையில் வரும் காலங்களில் அது அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தையும் போய்க் கொண்டிருந்ததாக அவ்வப்போது தகவல் வெளியானது. இந்த சூழலில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து வெற்றிமாறன் கூறியுள்ள வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி கொண்டிருக்கிறது.

Also Read : அஜித்தை இயக்கிய 5 இயக்குனர்களை கமுக்கமாக தூக்கிய விஜய்.. 2 பேருக்கும் சரிசமமாக வந்த ஹிட் படங்கள்