புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சூட்டிங் ஸ்பாட்டில் தொடையழகியுடன் குடுமிபிடி சண்டை போட்ட ராய் லட்சுமி.. சீக்ரெட்டை உடைத்த பயில்வான்

Bailwan Ranganathan: பொதுவாக பிரபலமாக இருக்கும் இரண்டு நடிகைகள் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தாலே ஈகோ உருவாகி விடும். அதிலும் சீனியர் மற்றும் ஜூனியர் நடிகைகள் நடித்தால் சொல்லவா வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சீக்ரெட்டை தான் பயில்வான் போட்டு உடைத்திருக்கிறார்.

அதாவது ஒரு காதலன் ஒரு காதலி என்ற படத்தில் ரம்பா, ராய் லட்சுமி இருவரும் இணைந்து நடித்திருந்தனர். கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. ஆனால் அந்த பட சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விஷயம் தான் பலருக்கும் நம்ப முடியாத ஆச்சரியமாக இருக்கிறது.

Also read: சக்சஸ் மீட்டில் கலந்து கொள்ளாத ஜெயிலர் 5 பிரபலங்கள்.. கிழித்து தொங்க விட்ட பயில்வான்

அதாவது அந்த படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் இயக்குனர் ரம்பா, ராய் லட்சுமி இருவரையும் ஷாட் ரெடி என்று அழைத்திருக்கிறார். ஆனால் இருவருமே கோரசாக எங்களால் வர முடியாது என்று கூறி இருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து இரண்டு பேரும் யார் சிறந்த நடிகை, நன்றாக யார் நடிப்பார்கள் என்று பேச ஆரம்பித்திருக்கின்றனர். அது அப்படியே வாக்குவாதமாக மாறி பெரிய சண்டையாக முற்றிப் போயிருக்கிறது. ஒரு கட்டத்தில் இரண்டு பேரும் நீயா நானா என்று குடுமிப்பிடி சண்டை போட்டார்களாம்.

Also read: 6 மாதம் கர்ப்பமாக இருக்கும் ரஜினியின் மகள்.. கோமாவில் இருந்து வந்த பயில்வான்

இதனால் படப்பிடிப்பு தளமே கொஞ்ச நேரம் ரணகளமாக மாறி இருக்கிறது. அவர்களை சமாதானப்படுத்த இயக்குனர் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்கள் சண்டையை நிறுத்திய பாடில்லை. இதனால் வேறு வழி இல்லாமல் அவர் இரண்டு பேரையும் தனித்தனியாக வைத்து ஷூட்டிங் நடத்தி இருக்கிறார்.

இந்த ரகசியத்தை இப்போது பயில்வான் வெளிப்படையாக ஒரு பேட்டியில் போட்டு உடைத்து இருக்கிறார். அந்த வகையில் சீனியர் நடிகையான ரம்பா உடன் ராய் லட்சுமி சண்டைக்கு பாய்ந்தது அதிர்ச்சியாக தான் இருக்கிறது. இருந்தாலும் இரண்டு அழகான நடிகைகளுக்குள் இந்த மாதிரி ஈகோ வருவதெல்லாம் சாதாரணம் தான்.

Also read: ஆதாரத்தோடு அந்த 2 படத்தை ஜெயிலரோடு ஒப்பிட்ட பயில்வான்.. அட ஆமாங்க வெளிவந்த நெல்சனின் தில்லாலங்கடி வேலை

- Advertisement -

Trending News