முதலாளியா காலுக்கு மேல கால் போட்டு இருந்தா தான் மதிப்பு.. லோகேஷ் பட்ட அவமானத்தால் உருவான G squad

Lokesh Kanagaraj : சினிமாவில் சீக்கிரம் சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று தான் வழி என்பதை பலர் புரிந்து வைத்திருக்கின்றனர். அதனால் தான் சினிமாவில் உள்ள நடிகர், நடிகைகள் கூட இப்போது சொந்தமாக தயாரிப்பு நிறுவனங்கள் தொடங்கி அதன் மூலம் கல்லா கட்டி வருகிறார்கள்.

சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் G squad என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருந்தார். ஆனால் லோகேஷை பொறுத்தவரையில் சினிமாவிலேயே நான் இன்னும் 10 படங்கள் தான் எடுப்பேன் என்று கூறியிருந்தார். ஆனால் திடீரென நேற்றைய தினம் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியதற்கான அறிவிப்பை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தி இருந்தார்.

அதாவது லியோ படத்தில் அவர் பட்ட அவமானத்தின் காரணமாகத் தான் இப்போது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறாராம். அதாவது சினிமாவை பொறுத்தவரையில் முதலாளியாக இருந்தால் தான் இங்கு மதிப்பு, மரியாதை என்பதை லோகேஷ் உணர்ந்து இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் லியோ படத்தில் விரும்பி தான் லோகேஷ் கமிட்டாகி இருக்கிறார்.

Also Read : ஒரே நாளில் நடக்கும் நிகழ்வை படமாக்கி வெற்றிகண்ட 5 இயக்குனர்கள்.. லோகேஷ் இதுல ஸ்பெஷலிஸ்ட்!

ஆனால் அதன்பிறகு இப்படத்தின் தயாரிப்பாளர் லலித்தால் லோகேஷ் பல அவமானங்களை சந்தித்து இருக்கிறார். இதனால் பாதியில் இருந்தே லியோ படத்திலிருந்து லோகேஷ் வெளிவந்ததாகவும் செய்தி வெளியானது. மேலும் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வந்த நெருக்கடியின் காரணமாக லியோ ப்ரமோஷனில் லோகேஷ் கலந்து கொண்டிருக்கிறார்.

ஆகையால் சினிமாவில் முதலாளியாக காலுக்கு மேல் கால் போட்டு இருந்தா தான் மதிப்பு என்பதை உணர்ந்து கொண்டு லோகேஷ் அதிரடியாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். மேலும் இந்நிறுவனத்தின் மூலம் முதல் படத்தை உறியடி படத்தின் மூலம் பிரபலம் அடைந்த விஜயகுமார் கதாநாயகனாக நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளார்.

Also Read : முதலாளியாக புது அவதாரம் எடுக்கும் லோகேஷ்.. ரோலக்ஸ் ஸ்கார்பியோ உடன் வெளிவந்த அறிக்கை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்