அம்பலமான அர்னவின் லீலைகள்.. புட்டு புட்டு வைத்த முன்னாள் மனைவி

arnav-divya
arnav-divya

சின்னத்திரை சீரியல் நடிகர் அர்னவை பற்றி பல திடுக்கிடும் தகவல் சில நாட்களாக வந்து கொண்டிருக்கிறது. அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா தொடரில் கதாநாயகனாக நடித்த வருபவர் அர்னவ். இவருக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் அர்னவ் தன்னுடன் நடித்த சக நடிகை ஆன திவ்யாவை காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் நடிகை திவ்யா, கர்ப்பமாக இருக்கும் என்னை அர்னவ் அடிப்பதாகவும், துன்புறுத்துவதாகவும், வேறு ஒரு பெண்ணுடன் அவர் தொடர்பு வைத்திருப்பதாக புகார் கொடுத்திருந்தார்.

Also Read :போலீசுக்கு டிமிக்கி கொடுக்க நினைத்த அர்ணவ்.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கும்மாங்குத்து

மேலும் எங்களுக்குள் திருமணம் ஆன செய்தியை வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியதாகவும் திவ்யா கூறியிருந்தார். அதன்படி அர்னவ் போலீசாரால் படப்பிடிப்பு தளத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பலரும் அர்னவுக்கு சாதகமாக பேசி வந்தனர்.

ஆனால் தற்போது அர்னவின் நிஜமுகம் அம்பலம் ஆகியுள்ளது. அதாவது கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பே திருநங்கை ஒருவரை விடாப்பிடியாக காதல் செய்து அர்னவ் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதைப் பற்றி திவ்யாவின் வழக்கறிஞரிடம் அர்னவின் முன்னாள் மனைவி பேசிய ஆடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Also Read :சீரியல் நடிகைகளின் வாழ்க்கையை சீரழிக்கும் ஈஸ்வர்.. மகாலட்சுமி முதல் திவ்யா வரை

அவர் பேசும்போது, அர்னவ் மிகவும் மோசமான ஒரு ஆள், ஒரு பெண்ணை சொடக்கு போடுற நேரத்தில் ஏமாற்றக்கூடியவன். என்னை திருமணம் செய்து கொண்டு என்னிடமும் நிறைய பணத்தை ஏமாற்றி விட்டான். அதுமட்டுமின்றி என்னையும் அடித்து துன்புறுத்துவான்.

அவனுடைய அப்பாவே அவன் வேணாம் என்று 10 வருடத்திற்கு முன்பே தலைமுழுகி விட்டார். மேலும் திவ்யாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இப்படியே விட்டால் அர்னவ் பல பெண்களை ஏமாற்றி பணத்தை சூறையாடுவான் என திருநங்கை கூறியுள்ளார். இவர் பேட்டி பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Also Read :தரமான போட்டியாளரை இறக்கிய விஜய் டிவி.. பிக்பாஸிலும் துவங்கிய சக்களத்திச் சண்டை

Advertisement Amazon Prime Banner