நயன் மார்க்கெட்டை இழந்ததால் தோல்வியான அன்னபூரணி.. ஓடிடி-யில் வெளிவரும் படம்

Nayanthara In Annapoorani OTT: நயன்தாரா சினிமாவிற்குள் நுழைந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் கடந்த நிலையில் சுமார் 75 படங்களில் முன்னணி ஹீரோயினாக வந்து லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கிறார். அத்துடன் ஹீரோகளுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுத்து ஒரு படம் இருக்கிறதோ, அதே மாதிரி இவருடைய கேரக்டரும் ஸ்ட்ராங்காக இருந்தால் மட்டும் நடிக்கக்கூடிய ஒரு நடிகையாக இருக்கிறார்.

அந்த அளவிற்கு தன்னம்பிக்கையும், ரசிகர்களை கவரும் வகையில் எதார்த்தமான நடிப்பும் இவரிடம் உண்டு. அப்படிப்பட்ட இவருடைய திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில் அடுத்து தமிழில் நடித்த படங்கள் எதுவும் பெருசாக எடுபடாமல் போய்விட்டது. அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த அன்னபூரணி படமும் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை.

அதனால் வசூல் அளவிலும் தோற்றுப் போய்விட்டது. ராஜா ராணி படத்திற்கு பிறகு ஜெயிக்கும் ஜோடியாக நடித்த நயன்தாரா படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் வைக்கப்பட்டது. மேலும் இப்படம் உணவு சமையல் கலையை மையமாக வைத்து இயக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் தோற்றுப் போனதால் இனி நயன்தாரா நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு இப்படித்தான் வரவேற்பு இருக்கப் போகிறது என்ற பேச்சுக்களும் அடிபட்டு வருகிறது.

Also read: நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய ஜோ.. சூர்யாவுக்கே டஃப் கொடுக்கும் சொத்தின் மதிப்பு

அதனால் இனி முன்மாதிரி நயன்தாராவிற்கு தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் போகப் போகிறது. இந்த ஒரு காரணத்திற்காக தான் அன்னபூரணி படமும் வியாபாரம் ஆகாமல் போய்விட்டது. இருந்தாலும் இதையெல்லாம் பற்றி கவலை கொள்ளாத நயன்தாரா தற்போது இவருடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் ஜாலியாக தான் ஊரை சுற்றி வருகிறார்.

இதற்கு இடையில் பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வெளிவந்த ஜவான் படம் வசூல் அளவில் நல்லாவே கல்லா கட்டி விட்டது. அதனால் இனிமேல் இவருடைய மார்க்கெட் பாலிவுட்டில் வேண்டுமென்றால் எடுபடலாம். ஏனென்றால் அங்கே திருமணத்திற்கு பின் நடித்தாலும் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து தான் வருவார்கள். இதை மனதில் வைத்துக் கொண்டு நயன் இனிமேல் முழு கவனத்தையும் அங்கே செலுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அடுத்ததாக அன்னபூரணி படம் வருகிற 29 ஆம் தேதி ஓடிடி-யில் netflix தளத்தில் வெளியாகப் போகிறது. அத்துடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியாக உள்ளது. மேலும் இதற்கு அடுத்து நயன்தாரா தமிழில் இரண்டு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்தப் படங்கள் எப்படி கை கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: லேடி சூப்பர் ஸ்டாரா.? ஆள விடுங்க, பொறாமையில் பொங்கும் நயன்தாரா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்