புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

அப்போ உள்ள இளையராஜா போல் ஒரு டசன் படங்களை கையில் வைத்திருக்கும் அனிருத்.. அதிர்ந்து போன ஏஆர் ரஹ்மான்

Aniruth: அப்போதைய காலங்களில் இளையராஜா ஒரு படத்திற்கு இசையமைத்து விட்டாலே அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிடும் என்பதுதான் வழக்கம். அந்த வகையில் இவருடைய கால் சீட்டுக்காக பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்று கொண்டு அதன்பின்னே படப்பிடிப்பை ஆரம்பிப்பார்கள். அதனால் தான் என்னமோ அப்ப உள்ள படங்கள் அனைத்தும் காலத்தால் அழிக்க முடியாத அளவிற்கு காவியமாக இப்போது வரை நிலைத்து நிற்கிறது.

அதற்கு முக்கிய காரணம் இளையராஜா தான். அதனாலேயே இவர் கையில் ஏகப்பட்ட படங்கள் இருக்குமாம். அப்படிப்பட்ட இவருக்கு இணையாக தற்போது ஒரு டஜன் படங்களை கையில் வைத்து ராக்ஸ்டார் ஆக அனிருத் சுற்றிக்கொண்டு வருகிறார். தனக்கான பாதை இதுதான் என்று முடிவெடுத்து அதை தீர்க்கமாக பிடித்து வெற்றியைப் பார்த்து வருகிறார்.

அதனால் தான் தற்போது அனைத்து நடிகர்களின் ஃபேவரிட் இசை நாயகனாக இடம் பிடித்திருக்கிறார். முக்கியமாக முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு அனிருத் மட்டும்தான் இசையமைத்துக் கொண்டு வருகிறார். அந்த அளவிற்கு இவருடைய பாடல்களால் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று விடுகிறது.

அத்துடன் இவரிடம் இருக்கும் மிகப்பெரிய ஸ்பெஷல் என்னவென்றால் ஒவ்வொரு நடிகருக்கும் ஏற்ற மாதிரி பாடல் அமைப்பது தான். அந்த வகையில் தற்போது பாலிவுட்டிலும் கலக்கிக் கொண்டு வருகிறார். அப்படிப்பட்ட இவர் தற்போது 13 படங்களுக்கும் மேலாக கமிட் ஆகி இருக்கிறார். அதாவது ரஜினி படம் என்றாலே அது அனிருத் தான் என்ற நிலைமைக்கு வந்து விட்டது. அதனால் தலைவர் 170 மற்றும் 171 படங்களுக்கு இசையமைக்க போகிறார்.

அடுத்ததாக இந்தியன் 2, லியோ, விடாமுயற்சி, ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கும் அனிருத் தான் பட்டையை தீட்டப் போகிறார். இதனை தொடர்ந்து தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவாரப் படம், அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் திருவிகம் படம் மற்றும் விஜய் தேவரகொண்டா படங்களுக்கும் அனிருத் தான் இசையமைக்கப் போகிறார்.

அத்துடன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் நடிக்கும் படம், டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடிக்கும் கிஸ் படத்திற்கும் அனிருத் கமிட் ஆகி இருக்கிறார். இப்படி தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி ராக்ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட இவருடைய அசுர வளர்ச்சியை பார்த்து ஏஆர் ரஹ்மானே அதிர்ந்து போய் நிற்கிறார்.

- Advertisement -

Trending News