18 வயதில் லிப்லாக், படுக்கையறை காட்சியில் நடித்தது ஏன்.? கூலாக பதில் சொன்ன அனிகா

குட்டி பெண்ணாக பல திரைப்படங்களில் நடித்திருக்கும் அனிகா இப்போது ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்துள்ளார். 18 வயதாகும் இவருக்கு சிறுவயதிலிருந்தே ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் சோசியல் மீடியாக்களில் இவர் வெளியிடும் போட்டோக்கள் தான் விதவிதமாக போட்டோ சூட் நடத்தி பரபரப்பை கிளப்பும் இவருக்கு இப்போது பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தற்போது இவர் நடித்திருக்கும் ஓ மை டார்லிங் திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வர இருக்கிறது. அதற்கான பிரமோஷன் வேலைகளில் இருக்கும் அனிகா அந்தப் படம் குறித்து வெளியான சர்ச்சைகளுக்கு ரொம்பவும் கூலாக பதில் அளித்திருக்கிறார். அதாவது அந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

Also read: முழு ஐட்டம் நடிகையாக மாறும் அனிகா.. மேடையில் நடந்த படு மோசமான சம்பவம்

அதில் பலரும் அதிர்ச்சியாகும் அளவுக்கு அனிகா படுக்கையறை காட்சி, லிப்லாக் போன்ற அனைத்திலும் பயங்கர தாராளம் காட்டி இருந்தார். அவரிடமிருந்து இப்படி ஒரு கிளாமரை எதிர்பார்க்காத பலரும் அது குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். தன்னை பற்றி வரும் அத்தனை கருத்துகளுக்கும் பதில் அளிக்காமல் இருந்த அனிகா இப்போது மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது, ஓ மை டார்லிங் திரைப்படத்தில் இடம்பெற்று இருந்த காட்சிகள் குறித்து பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் கதைக்கு அந்த காட்சிகள் முக்கியம் என்பதால் தான் நான் நடித்தேன். மேலும் இயக்குனர் கதை சொல்லும் போதே அந்த காட்சியின் முக்கியத்துவத்தை பற்றி என்னிடம் தெளிவாக கூறினார்.

Also read: லிப் லாக், படுக்கையறை என முகம் சுளிக்க வைத்த ஓ மை டார்லிங் டிரைலர்.. கேரியரை கெடுத்து கொண்ட அஜித்தின் ரீல் மகள்

அதனால்தான் நான் அந்த காட்சியில் நடித்தேன். அது மட்டுமல்லாமல் படத்தில் பார்க்கும்போது அந்த காட்சி நிச்சயம் கண்களை உறுத்தும் படியாகவோ, அருவருப்பாகவோ இருக்காது என்று தெரிவித்துள்ளார். உண்மையில் இது போன்ற காட்சிகளில் நடிக்கும் நடிகைகள் பலரும் சமாளிப்பதற்காக இது போன்ற கருத்துக்களை கூறுவது வழக்கம் தான்.

அந்த வகையில் ஹீரோயினாக மாறியிருக்கும் அனிகாவும் நன்றாகவே இந்த விஷயத்தை சமாளித்து பேசி இருக்கிறார். ஆனால் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக தான் அவர் இது போன்ற காட்சிகளில் நடித்திருப்பதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளது. அது மட்டுமல்லாமல் தொடர்ந்து இது போன்று கிளாமராக அவர் நடித்து வந்தால் கவர்ச்சி நாயகியாகவே முத்திரை குத்தப்பட்டு விடுவார் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

Also read: குட்டி டிரெஸ்ஸில் கிரங்கடிக்கும் குட்டி நயன்தாரா அனிகா.. தடுமாறும் இளசுகள்