Connect with us
Cinemapettai

Cinemapettai

oh-my darling-aniha

Videos | வீடியோக்கள்

லிப் லாக், படுக்கையறை என முகம் சுளிக்க வைத்த ஓ மை டார்லிங் டிரைலர்.. கேரியரை கெடுத்து கொண்ட அஜித்தின் ரீல் மகள்

18 வயதாகும் அனிகா இப்போது மலையாளத்தில் ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சிறு வயதிலேயே சோசியல் மீடியாவையே கலக்கி வந்தார். முன்னணி ஹீரோயின்களை ஓரம் கட்டும் அளவுக்கு கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வந்த இவர் தற்போது ஹீரோயின் அவதாரமும் எடுத்துள்ளார். 18 வயதாகும் அனிகா இப்போது மலையாளத்தில் ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

வரும் 24ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தில் அனிகாவுடன் இணைந்து மெல்வின் ஜி பாபு, முகேஷ், ஜானி ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி தமிழ் ரசிகர்களை அதிர்ச்சியாக்கி இருக்கிறது. ஏனென்றால் குழந்தையாக பார்த்த அனிகா இந்த படத்தில் படுக்கையறை காட்சிகளில் தாராளமாகவே நடித்து இருக்கிறார்.

Also read: ஒரே மெகா ஹிட் படத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போட்ட குழந்தை நட்சத்திரம்.. நைனிகா, அனிகாவெல்லாம் அப்புறம் தான்

சிறு பெண்ணான அவர் ஹீரோவுடன் ஓவர் நெருக்கம் காட்டுவது, லிப் லாக் போன்ற எல்லா காட்சிகளிலும் துணிந்து நடித்திருக்கிறார். இதைப் பார்த்த பலரும் சிறு பெண் இப்படி எல்லாம் நடிக்கலாமா என்று கூறி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் டிரைலரின் ஒவ்வொரு காட்சியும் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது.

விசுவாசம் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக க்யூட்டாக இருந்த அனிகாவா இது என்ற வியப்பையும் இந்த ட்ரெய்லர் ஏற்படுத்தி இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் என்னதான் ஹீரோயினாக வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் நல்ல கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என அறிவுரை கூறி வருகின்றனர்.

Also read: குட்டி டிரெஸ்ஸில் கிரங்கடிக்கும் குட்டி நயன்தாரா அனிகா.. தடுமாறும் இளசுகள்

அந்த அளவுக்கு அவர் இந்த படத்தில் ரொம்பவும் மோசமாக நடித்திருக்கிறார். மேலும் இப்படி ஒரு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அவருடைய கேரியரும் அதல பாதாளத்திற்கு சென்று விடும் எனவும் கருத்துக்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் அனிகா இனி மேலாவது சுதாரித்துக் கொண்டால் நல்லது. இல்லை என்றால் அவரை ஐட்டம் நடிகை என்ற ரேஞ்சுக்கு முத்திரை குத்தி விடுவார்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

Continue Reading
To Top