Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-ponnambalam

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பொன்னம்பலம் கேட்ட ஒரு விஷயம்.. கொஞ்சம் கூட யோசிக்காமல் அஜித் செய்த சம்பவம்

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பொன்னம்பலம் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக வில்லனாக நடித்து வரும் பொன்னம்பலம் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதில் அவர் அஜித்துடன் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்த நடித்தபோது ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்திருக்கிறது.

அதாவது அஜித், ஷாலினி நடிப்பில் உருவான அமர்க்களம் திரைப்படம் 1999 ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த பட சூட்டிங்கின் போது பொன்னம்பலம் அஜித்தை சந்தித்து ஒரு உதவி கேட்டிருக்கிறார். என்னவென்றால் அவருடைய நண்பரின் மகனுக்கு இதயத்தில் ஒரு பிரச்சனை இருந்திருக்கிறது.

Also read: மொத்தத்தையும் லிஸ்ட் போட்ட அஜித்.. அப்பாடி மொத்த கண்டத்தில் இருந்தும் தப்பித்த மகிழ்திருமேனி

அதை சரி செய்ய வேண்டும் என்றால் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற நிலை இருந்திருக்கிறது. அதற்காக ஏதாவது பண உதவி செய்ய முடியுமா என்று பொன்னம்பலம் அஜித்திடம் கேட்டிருக்கிறார். உடனே அவர் சம்பந்தப்பட்ட அந்த பையனின் மெடிக்கல் ரிப்போர்ட், ஹாஸ்பிடல் பில் போன்ற அனைத்தையும் கேட்டு வாங்கி இருக்கிறார்.

அதன் பிறகு ஷாட் ரெடியானதால் அவர் நடிப்பதற்கு சென்று விட்டாராம். இப்படி எதுவுமே சொல்லாமல் அஜித் சென்று விட்டாரே என்று நினைத்த பொன்னம்பலம் அவர் திரும்பி வரும் வரை காத்திருந்தாராம். சிறிது நேரத்திற்கு பிறகு திரும்பி வந்த அஜித் வழக்கம்போல தன்னுடைய வேலையை பார்த்தபடி இருந்திருக்கிறார்.

Also read: நடிப்பில் மட்டுமல்ல ஜோசியம் பார்ப்பதிலும் கில்லாடி அஜித்.. அவர் கணித்த பின் படங்களுக்கு பெயர் வைக்கும் இயக்குனர்

உடனே குழம்பிப்போன பொன்னம்பலம் நாம் சொல்லியதை அஜித் மறந்து விட்டாரோ என்று நினைத்துக் கொண்டு மீண்டும் ஆபரேஷன் பற்றி ஞாபகப்படுத்தி இருக்கிறார். அதற்கு அஜித் நீங்க என்னிடம் கேட்ட போதே நான் ஹாஸ்பிடல் பில் அனைத்தையும் கட்டி விட்டேன். நீங்கள் இன்னும் ஏன் இங்கு நிற்கிறீர்கள் என்று கேட்டாராம்.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பொன்னம்பலம் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார். இதுதான் அஜித்தின் குணம். யாராவது கஷ்டப்படுகிறார்கள் என்று கேள்விப்பட்டால் உடனே உதவி செய்துவிடுவார். ஆனால் இன்று வரை அவர் தான் செய்யும் உதவிகளை பகிரங்கப்படுத்திக் கொண்டது கிடையாது. அந்த வகையில் பொன்னம்பலத்தின் நண்பருக்கு அவர் செய்த இந்த உதவி கேட்பவர்களை நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

Also read: நம்மை கவர்ச்சியால் கட்டி போட்ட 5 ஐட்டம் சாங்ஸ்.. அஜித்தே இறங்கி குத்திய அந்தப் பாடல்

Continue Reading
To Top