65 வயதில் 30 வயது போல் இருக்கும் நடிகர்.. சிவக்குமார் வழியில் 35 வருடங்களாக சினிமாவில் இருக்கும் ஜென்டில்மேன்

தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் வில்லன்கள் எல்லாம் ஹீரோக்களை விட ரொம்ப ஸ்மார்ட்டாகவும், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கவும் வில்லன்களாகவும் காட்டப்பட்டுகின்றன. ஆனால் 10 வருடங்களுக்கு முந்தைய தமிழ் சினிமாவில் இருந்த வில்லன்கள் எல்லாம் ரொம்ப கொடூரமாகவும், மது, புகைபிடிப்பது, கற்பழிப்பது என காட்டப்பட்டார்கள்.

அந்த காலகட்டத்தில் வில்லனாக அறிமுகமானவர் தான் இந்த வில்லன் நடிகர். திரையில் இவர் பண்ணாத அட்டூழியங்களே இல்லை என்றே சொல்லலாம். ரஜினிகாந்த், கமலஹாசன், சரத்குமார், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மிகப்பெரிய வில்லனாக நடித்தார். இவர் நடிப்பை கண்டு தமிழ் சினிமா ரசிகர்களே அவரை வெறுத்து ஒதுக்கினர்.

Also Read: பாண்டிச்சேரியில் பிறந்ததுட்டு குடிப்பழக்கம் இல்லாத ஒரே நடிகர்.. வில்லனா பிறந்துட்டு எந்த ஒரு மேட்டர்லயும் சிக்கல

ஆனால் திரையில் மட்டுமே இவர் இப்படியெல்லாம் நடித்திருக்கிறாராம். நிஜ வாழ்க்கையில் இவருக்கு மது, புகை பிடிப்பது போன்ற எந்த கெட்ட பழக்கங்களும் கிடையாதாம். பொதுவாக சினிமாவில் இப்படியெல்லாம் தவறுகள் நடக்கும் என பேசப்படும் எந்த ஒரு கெட்ட பழக்கத்தையும் இவர் செய்ததில்லையாம். நடிகர் சிவகுமாரை போல இந்த நடிகரும் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் நல்லவராக வாழ்ந்து கொண்டிருக்கிறாராம்.

கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேல் சினிமா உலகில் தன்னுடைய கலைப்பணியை மேற்கொண்டு வரும் ஆனந்தராஜ் தான் அந்த நடிகர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற இண்டஸ்ட்ரிகளில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். நிறைய படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், பெரும்பான்மையாக இவர் நெகட்டிவ் கேரக்டரில் தான் நடித்திருக்கிறார்.

Also Read: ஆனந்தராஜ்க்கு ஏற்பட்ட பெரிய ஏமாற்றம்.. 6 வருடம் கழித்து கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்த ரஜினி

நடிகர் ஆனந்தராஜ்க்கு தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த ஒரு கெட்டபழக்கமும் கிடையாதாம். அதனால் தான் அவர் 65 வயதாகியும் இளமையாக, கட்டுக்கோப்பான உடற்கட்டுடனும் இருக்கிறாராம். 90களின் இறுதியில் வில்லனாக மிரட்டிய இவர், இப்போது பல படங்களில் முன்னணி காமெடி ஹீரோக்களுக்கு இணையாக காமெடியனாகவும் கலக்கி வருகிறார்.

நடிகர் ஆனந்த்ராஜ் என்றால் மக்களுக்கு நினைவில் வருவது, அவர் நடித்த பாட்ஷா படத்தின் இந்திரன் கேரக்டர் தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கும் காட்சியில் பயங்கரமாக மிரட்டியிருப்பார். அப்படி மிரட்டிய ஆனந்த்ராஜ் சமீபத்தில் வெளியான நானும் ரவுடி தான், ஜாக்பாட் போன்ற படங்களில் காமெடியிலும் சிரிக்க வைத்திருந்தார்.

Also Read: வில்லனை புகழ்ந்து தள்ளிய விஜயகாந்த்.. டேய் அந்த படத்தில் நீதான்டா ஹீரோ?

Next Story

- Advertisement -