300 படங்கள் மேல் நடித்து ஒரு விருது கூட வாங்காத நடிகர்.. ஒட்டுண்ணியாக வாழ்ந்து அரசியலால் அழிந்த ஹீரோ

Tamil Movie Comedians: இப்போதைய சினிமாவில் ஒரு நடிகர் ஒரு படம் நடித்து அது ஹிட் ஆனாலே பெரிய அளவில் பேசப்படுகிறது. ஆனால் 80 மற்றும் 90களின் காலகட்டத்தில் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி அவ்வளவாக இல்லாததால் நமக்கு பிடித்த நடிகர்கள் கூட எத்தனை படங்கள் நடித்தார்கள், என்ன விருதுகள் வாங்கினார்கள், அவர்களுடைய பொருளாதார நிலைமை எப்படி இருந்தது என்று கூட நமக்கு தெரியாது.

அப்படிப்பட்ட காலகட்டத்தில் நடிகர் ஒருவர் கிட்டத்தட்ட 300 படங்களில் நடித்திருக்கிறார். ரசிகர்களிடையே இவருக்கு நல்ல செல்வாக்கும் இருந்திருக்கிறது. ஆனால் இந்த நடிகர் செய்த தப்பால், சினிமாவில் நீடிக்க முடியாமல், இருக்கும் இடம் தெரியாமல் இப்போது காணாமல் போயிருக்கிறார். இவருடைய சினிமா கேரியர் இப்படி முடிந்ததற்கு முழுக்க முழுக்க இவரை தான் காரணமாகவும் இருந்திருக்கிறார்.

Also Read:நடிச்ச 35 படத்தில் 10 படம் மட்டுமே வெற்றியா.? விஷாலை குழிதோண்டி புதைத்த தோல்வி படங்கள்

1979 இல் இருந்து தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களின் நடித்த செந்தில் தான் அந்த நடிகர். செந்திலை தெரியாதவர்களே யாரும் இல்லை என்று சொல்லலாம். இருந்தாலும் செந்திலுக்கு இப்போது பட வாய்ப்புகள் என்று எதுவும் கிடையாது. 90களின் காலகட்டத்தில் கவுண்டமணி செந்தில் காமெடி இருந்தால்தான் படங்கள் வெற்றி பெறும் என்ற அளவிற்கு இந்த காம்போ இருந்தது.

செந்தில், கவுண்டமணியிடம் அடி வாங்குவது போலவும், திட்டு வாங்குவது போலவும் தான் எல்லா படங்களிலும் நடித்திருக்கிறார். இது போன்ற காட்சிகள் தான் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. உண்மையில் கவுண்டமணி இல்லாமல் நாம் காமெடி பண்ண வேண்டும், தனி படங்களில் நடிக்க வேண்டும் என்று செந்தில் யோசிக்காமல், தனக்கென ஒரு தனித்துவத்தை உருவாக்காமலேயே போய்விட்டார்.

Also Read:மார்க் ஆண்டனியால் நிம்மதி பெருமூச்சு விட்ட லாரன்ஸ்.. மூன்று படங்களுடன் மோதும் சந்திரமுகி 2

கவுண்டமணி இதில் ரொம்பவும் உஷாராகவே இருந்திருக்கிறார். செந்தில் இல்லாமலேயே சத்யராஜ், மணிவண்ணன், சரத்குமார், விஜயகாந்த், ரஜினிகாந்த் போன்ற நடிகர்களுடன் சோழவாக காமெடி செய்து மக்கள் மனதில் பதிந்து விட்டார். ஆனால் கவுண்டமணி இல்லாத செந்திலின் சில காமெடி காட்சிகள் மக்களிடையே பின்னாளில் வரவேற்பை பெறவில்லை.

300 படங்கள் நடித்தும் தனக்கான ஒரு தனி பாதையை உருவாக்காமல் விட்டதோடு, அரசியல் கட்சிகளின் இணைந்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். இவருடைய குணம் உண்மையாவே குழந்தை போன்றது என்பதால், என்ன பேசுகிறோம் என்று தேவையில்லாத பேசி கொஞ்சம் பெயரையும் டேமேஜ் செய்து கொண்டார். இதனால் தான் செந்திலின் கேரியர் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஜெயிக்காமல் போனது.

Also Read:பெரிய நடிகர்களுக்கு கூட வராத யோசனை.. சொன்னதை செய்து காட்டிய விஜய் டிவி பாலா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்