நடிச்ச 35 படத்தில் 10 படம் மட்டுமே வெற்றியா.? விஷாலை குழிதோண்டி புதைத்த தோல்வி படங்கள்

Vishal Hit Movies: விஷால் இதுவரை தமிழில் 35 படங்கள் நடித்திருக்கிறார். அதில் இவருக்கு 10 படங்கள் மட்டுமே ஹிட் ஆனது. அதை தவிர்த்து மற்ற எல்லா படங்களும், இவருக்கு நினைத்த அளவிற்கு பெரிய ஹிட் எல்லாம் கிடைக்கவில்லை. ஓரளவுக்கு சாதாரண வெற்றி தான் பெற்றது. அதிலும் ரொம்ப மோசமான தோல்வியை சந்தித்த திரைப்படங்கள் பார்ப்போமா!

சண்டக்கோழி 2: லிங்குசாமி இயக்கத்தில் 2018 இல் வெளிவந்த சண்டக்கோழி 2 சுமாரான படமாகவே அமைந்தது. இது 2008ல் வெற்றிபெற்ற ராஜ்கிரண் மற்றும் விஷால் கூட்டணியில் வெளியான சண்டக்கோழி 1, போலவே ஹீரோவின் அப்பா மாவட்டமே பயப்படும் அளவுக்கு பயமும் மரியாதையும் கலந்து ஒரு மனிதனாக இருப்பார். இது குடும்ப பின்னணியில் எடுக்கப்பட்ட படமாகும். வில்லனுக்கும் இவர்களுக்கும் இடையே நடக்கும் சம்பந்தமே இல்லாமல் பிரச்சனை தான், பிளாப்பிற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

Also Read:வெற்றிமாறனுக்கு டிமிக்கி கொடுக்கும் விஜய் சேதுபதி.. சூர்யா படத்தில் கைவைத்த கொடுமை

அயோத்தியா: வெங்கட் மோகன் இயக்கத்தில் 2019ல் வெளிவந்தது அயோத்தியா. இது தெலுங்கில் வெளிவந்த டெம்பர் படத்தின் ரீமேக் ஆகும். ஹீரோ அனாதை, இவருக்கு சிறுவயதிலிருந்தே நிறைய காசு அதிகாரபூர்வமாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை. அதற்காக போலீசில் சேர்ந்து பல தவறுகளில் ஈடுபடுவார். பிறகு திருந்தி நல்லவர் ஆகிவிடுவார். இது போன்ற கதைகள் தமிழ் படங்களில் ஏற்கனவே உள்ளது. இதுவே தோல்விக்கு ஒரு காரணமாகும்.

ஆக்சன்: சுந்தர் சி இயக்கத்தில் 2019ல் வெளியானது ஆக்சன். இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் பார்க்கும்போது ரசிகர்கள், இது ஒரு ஜேம்ஸ் பாண்ட் சீரியஸ் போல் ஆக்சன் திரைப்படம் ஆக இருக்கும் என எதிர்பார்ப்புடன் இருந்தனர். பிறகு ஆக்சன் காமெடி திரைப்படம் என்று தெரிந்ததும், பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக் என்பது போல் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத காரணத்தினாலே இந்த திரைப்படம் தோல்வியை சந்தித்தது.

சக்ரா: அனந்தன் இயக்கத்தில் 2021ல் சக்ரா வெளியானது. சென்னை சிட்டியில் சுதந்திர தினத்தன்று போலீஸார்கள் பிசியாக இருக்கும்போது, தொடர்ந்து 50 இடங்களில் கொள்ளை நடக்கிறது. போலீசாரே இதை கண்டுபிடிக்க திக்முக்காடுகிறார்கள். அந்த சமயத்தில் ஹீரோ போலீசாருக்கு உதவி செய்வார். அனைத்து கொள்ளையும் கண்டுபிடிப்பதே கதை ஆகும். ஈசியாக கணிக்கும் அளவிற்கு திரைப்படத்தின் கதை அமைந்திருந்தது, இதுவே திரைப்படம் தோல்விக்கு காரணமாக இருக்கலாம்.

Also Read:இழுபறியில் லைக்காவின் விடாமுயற்சி.. பெரும் தலைவலியால் சூப்பர் ஸ்டாரிடம் தஞ்சம் லைக்கா தயாரிப்பில் அடுத்தடுத்து இந்தியன் 2, சந்திரமுகி 2, மிஷன், லால் ச

எனிமி: ஆனந்த் சங்கர் இயக்கத்தில் 2021ல் விஷால், ஆர்யா கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் எனிமி. சிறுவயதில் இருவரும் நல்ல நண்பர்கள். விஷாலின் அப்பா எந்த ஒரு வம்பு தும்புக்கும் போகாமல் இருக்க வேண்டும் என்றும், ஆர்யாவின் அப்பா நாட்டில் நிலவும் தீவிரவாதத்தை அழிக்க வேண்டும் என்றும் இருவருக்கும் சொல்லி வளர்ப்பார்கள். பிறகு பெரியவர்களாக ஆனதும், இருவரும் எதிரியாக இருப்பார்கள். என்ன நடந்தது எதனால் இப்படி ஆனார்கள் என்பதே திரைப்படத்தின் கதை ஆகும்.

வீரமே வாகை சூடும்: தூபா சரவணன் இயக்கத்தில் 2022ல் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக வெளியானது வீரமே வாகை சூடும். விஷாலுக்கு போலீசில் சேர்ந்து கிரிமினல் இன்வெஸ்டிகேஷன் ஆபிஸராக ஆக வேண்டும் என்பதே ஆசை. இதில் இவரின் தங்கச்சியை யாரோ கொன்று விடுவார்கள். கொலைக்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடிப்பது கதையாகும். படத்திற்கு நினைத்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

Also Read:ஜூனியர் மயிலுடன் கைகோர்க்கும் அதர்வா.. சுட சுட வெளியான அப்டேட்

லத்தி: வினோத்குமார் இயக்கத்தில் 2022 இல் வெளிவந்தது லத்தி. இதில் விஷால் ஒரு சஸ்பெண்ட் ஆன போலீஸ் ஆபீசர். லத்தி ஸ்பெஷலிஸ்ட், இவர் மறுபடியும் வேலையில் சேர்வதற்கு இரண்டு உயர் அதிகாரிகளிடம் உதவி கேட்பார்.வேலையில் சேர்ந்ததும், இதில் ஒரு மேலதிகாரியின் மகளை ஊரில் உள்ள பெரிய ரவுடியின் மகன் மோசம் செய்து விடுவான். அதற்கு பழிவாங்க இவரை லத்தியால் அடிக்க சொல்வார். அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை கணிக்கக் கூடிய வகையில் இருந்தது படத்தின் பிளாப்பிற்கு காரணம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்