அமீர் தயாரிப்பாளராக தோற்றுப்போன 3 படங்கள்.. பல கோடி கடனால் தெருகோடிக்கு வந்த ராஜன்

Ameer lost 3 films as a producer: சேது படத்தில் இயக்குனர் பாலாவுக்கு உதவி இயக்குனராக பணி புரிந்து வந்தவர் தான் அமீர். இவரிடம் இருந்து சினிமாவைப் பற்றி பல நுணுக்கங்களை கற்றபின் இயக்குனராக பயணிக்க தொடங்கினார். அப்படி இவர் இயக்கிய முதல் படம் தான் மௌனம் பேசியதே. இப்படத்தின் மூலம் சிறந்த இயக்குனர் என்கிற அங்கீகாரத்தை பெற்றார். அதுமட்டுமல்லாமல் சூர்யாவிற்கு ஹீரோக்கான மெட்டீரியலையும் இப்படம் தான் வாங்கிக் கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து ஜீவாவை வைத்து ராம் என்கிற படத்தை எடுத்து மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றார். அத்துடன் ஜீவாவுக்கும் நடித்த படங்களில் இதுதான் பெஸ்ட் படம் என்று சொல்கிற அளவிற்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. அதன் பின் எப்படியாவது ஹீரோவாக ஆகிவிட வேண்டும் என்று சினிமாவிற்குள் நுழைய ஆசைப்பட்டார் கார்த்தி.

அந்த வகையில் இவரை வைத்து பருத்திவீரன் என்கிற படத்தை எடுத்து மாபெரும் ஹிட் கொடுத்து கார்த்தி மற்றும் அமீர்க்கு பாராட்டுக்கள் குவியும் வகையில் இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு இடையில் இப்படத்தில் ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும் சிறந்த இயக்குனர் படைப்பாளி என்கிற பெருமிதத்தை அமீர் பெற்றுக் கொண்டார்.

Also read: இவ்வளவு சண்டையிலும் நன்றி சொல்ல ஒரு மனசு வேணும் சார்.. சூர்யாவை புல்லரிக்க வைத்த அமீர்

இதனை அடுத்ததாக அமீர், யோகி என்கிற படத்தில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அடுத்த கட்ட லெவலுக்கு வந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரீச் ஆகவில்லை. இதனால் 2 கோடிக்கு மேல் பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. இதனை அடுத்து ஜெயம் ரவியை வைத்து ஆதி பகவன் என்கிற படத்தை இயக்குவதற்கு கமிட்டாகினார். ஆனால் படம் பாதியில் எடுக்கும் போதே சில காரணங்களால் அப்படியே டிராப் ஆகிவிட்டது.

இந்த படத்தின் மூலம் ஏற்கனவே கடன் பட்டிருந்த ரெண்டு கோடி கடனை அடைத்திருக்கிறார். அதனால் இப்படம் அப்படியே நட்டாற்றில் நிறுத்தப்பட்டு விட்டது. அடுத்ததாக அச்சமில்லை அச்சமில்லை என்கிற படத்தில் தயாரிப்பாளரானார். அப்படி தயாரித்த இப்படம் தற்போது வரை வெளிவராமல் இருக்கிறது.

அதற்கு காரணம் இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிடுவதாக கூறி படத்தின் உரிமையை வாங்கி இருக்கிறார்கள். ஆனால் இன்றளவும் இந்த படத்தை வெளியிடாமல் வைத்திருப்பதால் மொத்த பணமும் வீணாகிவிட்டது என்று அமீர் பலபேட்டிகளில் கூறியிருக்கிறார். ஆக மொத்தத்தில் அமீர் இயக்குனராக வெற்றி பெற்றிருந்தாலும், தயாரிப்பாளராக பல கோடிகளில் கடன் பட்டு தற்போது நஷ்டத்தில் இருக்கிறார்.

Also read: ஹீரோயின்கள் மத்தியில் அமீர் வளர்த்த கலாச்சாரம்.. கெட்டியாக பிடித்து பெயரைக் காப்பாற்றிய 5 நடிகைகள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்