fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஒரு நாளைக்கு 3GB டேட்டா.. அதிரடி காட்டும் ஜியோ.. அலறி ஓடும் மற்ற நிறுவனங்கள்

jio-new-business

India | இந்தியா

ஒரு நாளைக்கு 3GB டேட்டா.. அதிரடி காட்டும் ஜியோ.. அலறி ஓடும் மற்ற நிறுவனங்கள்

சில மாதங்களாக இணையதள சேவையை உபயோகப்படுத்தும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றது இதற்கு முக்கிய காரணம் ஜியோ இலவசமாக அளித்த சலுகைகள் மட்டுமே, இதனால் பல முன்னணி தொலைபேசி நிறுவனங்கள் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது இலவசங்களை தவிர்த்து புதிய ப்ரீபெய்ட் பிளானை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 84 நாள் வலிடிட்டி உள்ள புதிய ஆஃபர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் 999க்கு புதிய prepaid plan 3GB டேட்டாவை வழங்குகிறது.

இதில் முக்கியமானது என்னவென்றால் அனைத்து ஜியோ எண்களுக்கும் அன்லிமிடெட் அழைப்புகள் விடுத்துக்கொள்ளலாம். தினமும் 100 இலவச எஸ்.எம்.எஸ் செய்துகொள்ளலாம்.

இந்த 3 ஜிபி டேட்டா தீர்ந்துவிட்டால் வேகம் சற்று குறையும் அதாவது 64KBPS குறைந்து விடுமாம். இந்த பிளானை நாம் பல வழிகளில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் கூகுள் பிளே, Paytm, மை ஜியோ ஆப் போன்ற செயலிகளின் மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

jio-plan-999-cinemapettai-2

jio-plan-999-cinemapettai-2

தற்போது வீட்டிலிருந்து வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும் இது மிகவும் பயனாக இருக்கும், இதனை டார்கெட் செய்து இந்தப் பிளானை இறங்கியுள்ளதாக இணையதளத்தில் செய்திகள் வெளிவந்துள்ளன.

இதே போல் 555 ரூபாய்க்கு இன்னொரு பிளானையும் அறிமுகப்படுத்தியுள்ளது, 1.5GB data தினமும் கிடைக்கும் இதனுடைய வேலிடிட்டி என்று பார்த்தால் 84 நாட்கள். இதுபோன்ற சலுகைகளை அறிவித்து ஜியோ நெட்வொர்க் மற்ற நிறுவனங்களை அடித்து நொறுக்கி உள்ளது என்று ஜியோ வாடிக்கையாளர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in India | இந்தியா

அதிகம் படித்தவை

To Top