செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

2வது திருமணம் செய்து கொண்ட அமலாபால்.. இணையத்தை அலங்கரித்த கல்யாண போட்டோஸ்

Amala Paul Marriage Photos: அமலாபால் சமீபத்தில் தனது காதலன் ஜகத் தேசாய் உடன் லிப் லாக் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் நேற்று கேரளாவில் ஜகத் தேசாயை அமலா பால் கரம்பிடித்து உள்ளார். அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

அதாவது தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகை தான் அமலா பால். இவரை சுற்றி நிறைய சர்ச்சைகள் வந்து கொண்டே இருந்தது. அந்த வகையில் தனுசுடனும் அமலா பால் கிசுகிசுக்கப்பட்டார். இந்நிலையில் தலைவா படத்தின் மூலம் இயக்குனர் ஏ எல் விஜய் உடன் அமலா பாலுக்கு காதல் மலர்ந்தது.

இவர்கள் இருவரும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்ட நிலையில் சில வருடங்களிலேயே இருவருக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து விட்டனர். இதை அடுத்து அமலாபால் படங்களில் கவனம் செலுத்தி வந்த நிலையில் தொடர் பிளாப் கொடுத்து வந்தார். இப்போது தான் மீண்டும் அமலா பால் கம்பேக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.

Also Read : அடுத்த வருடம் ரிலீஸ் ஆக உள்ள மாஸ் ஹீரோக்களின் 13 படங்கள்.. சூப்பர் ஸ்டாருடன் மோதும் தனுஷ்

இந்த சூழலில் தனது பிறந்த நாளில் அன்று காதலனை அறிமுகம் செய்த நிலையில் இன்று அவரது திருமண புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. ஏனென்றால் இதற்கு முன்னதாக அமலாபால் தன்னுடைய திருமணம் குறித்து எந்த அறிவிப்பும் தெரிவிக்காத நிலையில் திடீரென ஒரு கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார்.

2வது திருமணம் செய்து கொண்ட அமலாபால்

amala-paul-marriage
amala-paul-marriage

அதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும்தான் திருமணத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர். மேலும் இப்போது அமலாபால் மற்றும் ஜகத் தேசாய் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இந்த ஜோடிக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இணையத்தை அலங்கரித்த அமலாபால் கல்யாண போட்டோஸ்

amala-paul
amala-paul

Also Read : அமலாபால் அடித்த லிப் கிஸ்.. முத்தம் கொடுத்தது யாருக்கு தெரியுமா?

- Advertisement -

Trending News