திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

விக்னேஷ் சிவனுக்கு டாட்டா காட்டிய அஜித்.. வேகவேகமாக தாடியை எடுத்ததற்கு இதுதான் காரணம்

நடிகர் அஜித் வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் ‘துணிவு’ படத்தில் நடித்து கொண்டிருந்தார். இந்த படம் வரும் பொங்கலன்று ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்திற்காக அஜித் நீண்ட தாடியுடன் காணப்பட்டார். இந்த படத்தின் எல்லா வேலைகளும் நேற்றோடு முடிந்துவிட்டது.

இந்நிலையில் நடிகர் அஜித் படப்பிடிப்பு முடிந்த கையோடு அவருடைய நீண்ட தாடியை எடுத்துவிட்டார். இவர் துணிவு திரைப்படத்திற்கு பிறகு தன்னுடைய 62வது படமான விக்னேஷ் சிவன் இயக்குகின்ற படத்தில் இணைவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். அதனால் தான் இப்போது அஜித் விக்னேஷ் சிவன் படத்திற்காக தாடியை எடுத்திருப்பார் என அனைவரும் யூகித்தனர்.

Also Read: வாரிசை அடுச்சு தூக்க நாள் குறித்த துணிவு.. அவசரப்பட்டு வாய்விட்டு விட்டோமோ என பயத்தில் தளபதி விஜய்

ஆனால் அஜித்துடைய திட்டமே வேறு என இப்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது இதற்கு முன்பு வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பின் போதே லடாக் வரை தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சென்றார். அவ்வப்போது படப்பிடிப்பின் இடைவெளிகளின் போது அஜித், நடிகை மஞ்சு வாரியார் மற்றும் படக்குழுவினருடன் மோட்டார் சைக்கிள் ரைட் சென்று வந்தார்.

இதற்கிடையில் நடிகர் அஜித் தன்னுடைய 62 வது படத்தை முடித்துவிட்டு ஒன்றரை வருடத்திற்கு வேர்ல்டு டூர் செல்லவிருக்கிறார் என தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் அஜித் இப்போது படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே தன்னுடைய பைக் ரைடை ஆரம்பிக்க இருக்கிறார். அதற்காக தான் தாடியெல்லாம் எடுத்து இளமையாக மாறியிருக்கிறார்.

Also Read: துணிவுக்கு முந்திய வாரிசு.. டீ கிளாஸ், கூலர்ஸ் உடன் பிரம்மாண்ட பேனர், தியேட்டரில் மாஸ் காட்டும் தளபதி

ஆனால் அஜித் இப்போது செல்ல இருப்பது 60 நாட்கள் பைக் ரைடு மட்டும் தானாம். இரண்டு மாதம் பைக் ரைட் சென்று திரும்பிய பிறகு தன்னுடைய 62வது படத்தின் படப்பிடிப்பில் இணையவிருக்கிறார். அப்படியென்றால் இந்த படம் பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது. வரும் 2023 ஆம் ஆண்டு மே மாதம் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

AK 62 லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். நடிகை த்ரிஷா நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிகர் அஜித்துடன் இந்த படத்தில் இணைய இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. காத்துவாக்குல ரெண்டு காதல் பட வெற்றிக்கு பிறகு விக்னேஷ் சிவன் அஜித்துடன் இந்த படத்தில் இணைகிறார்.

Ajith Airport Trending Video: ஏர்போட்டில் கெத்து காட்டிய அஜித்

- Advertisement -

Trending News