விடாமுயற்சியின் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித்.. ஜெட் வேகத்தில் லண்டன் விரைந்த பட குழு

Vidamuyarchi Movie Upadte: விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு போன்ற இரண்டு படங்களும் இந்த வருட தொடக்கத்தில் ரிலீஸ் ஆகி ரணகளம் செய்தது. விஜய் வாரிசுக்கு பிறகு இப்போது லியோ படத்தை முடித்துவிட்டு அக்டோபரில் ரிலீஸ் செய்ய காத்திருக்கிறார். ஆனால் துணிவு படத்திற்கு பிறகு அஜித் கமிட்டான விடாமுயற்சி படம் வரிசையாக ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

 முதலில் இயக்குனர் மாற்றம், அதன் பிறகு ஐடி ரைட், கதை மாற்றம் என  விடாமுயற்சி படத்திற்கு என்று ஒவ்வொரு பிரச்சனையும் பூதாகரமாக கிளம்புகிறது. விடாமுயற்சி இனிமேல் தொடங்கப்படாது என பல வதந்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் தல ரசிகர்களும் பதறிப் போய் உள்ளனர் .

Also Read: கமலால் தாமதமாகும் விடாமுயற்சி.. எல்லாம் கை கூடி வரும் போது இப்படியா நடக்கணும்

அதற்கு தகுந்தார் போல் இந்த படமும் ஆரம்பிக்காமல் மாதக்கணக்கில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி  வைத்திருக்கிறார் அஜித். அது மட்டுமல்ல ஜெட் வேகத்தில் பட குழுவும் லண்டன் விரைந்துள்ளது. 

இப்போது ஒரு வழியாக படத்தின் சூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கும் என்ற என தகவல்கள் தினம் தோறும் வெளிவந்து கொண்டிருந்தனர். ஆனால் தேதி அறிவிக்கவில்லை. தற்பொழுது திடீரென ஆகஸ்ட் 18 ஆம் தேதி படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என உறுதியான தகவல் கிடைத்துள்ளது.

Also Read: சூர்யாவுக்காக சிறுத்தை சிவா செய்த பிரம்மாண்டம்.. ரஜினி, அஜித்தை டீலில் விட இதுதான் காரணம்

இயக்குனர் மகிழ்திருமேனி தயாரிப்பாளரை சந்திக்க லண்டன்  சென்றிருக்கிறார். அதனால் வந்ததும் கண்டிப்பாக படப்பிடிப்பு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதியும் சொல்லிவிட்டு ஆரம்பிக்கவில்லை என்றால் கண்டிப்பாக ரசிகர்கள் கண்டிப்பாக, வெறுத்துப் போய் விடுவார்கள்.

ஆனால் நிச்சயம் அஜித் அப்படி ஒரு விஷயத்தை செய்து விடமாட்டார். ரசிகர்களுக்காக ஒவ்வொரு படத்திலும் பார்த்து பார்த்து நடித்துக்  கொண்டிருக்கிறார்.  எனவே விடாமுயற்சி படத்தை ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி சில மாதத்திலேயே படத்தை முடித்து ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Also Read: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உயிரை விட்ட 2 ரசிகர்கள்.. அஜித் செய்யாததை, செய்த நடிகர் சூர்யா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்