கமலால் தாமதமாகும் விடாமுயற்சி.. எல்லாம் கை கூடி வரும் போது இப்படியா நடக்கணும்

Kamal Haasan – Vidaamuyarchi: முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த்,கமலஹாசன்,விஜய், விக்ரம், சூர்யா போன்றவர்கள் தங்களுடைய படங்களின் அப்டேட்டுகளை அடுத்தடுத்து கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், நடிகர் அஜித்குமாரின் படமான விடா முயற்சி பற்றி இதுவரை எந்த தகவலுமே வெளியாகவில்லை. கடந்த வருடமே இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தற்போது சத்தமே இல்லாமல் இருக்கிறது.

படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி மற்றும் படத்தின் டைட்டில் விடாமுயற்சி என்ற அப்டேட்டுகளை கொடுத்து இரண்டு மாதங்கள் ஆகிறது. படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. நடிகர் அஜித்குமாரும் வெளிநாடு சுற்றுப்பயணத்தில் பிஸியாகிவிட்டார். மற்ற ஹீரோக்களின் படங்களின் அப்டேட்கள் வெளியாகிக் கொண்டிருப்பதால், அஜித்தின் ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.

Also Read:சூர்யாவுக்காக சிறுத்தை சிவா செய்த பிரம்மாண்டம்.. ரஜினி, அஜித்தை டீலில் விட இதுதான் காரணம்

இது போன்ற ஒரு சூழ்நிலையில் உலக நாயகன் கமலஹாசனால் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பிப்பதில் சற்று தாமதம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. கமல் நடிப்பில், சங்கர் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ்க்கு ரெடி ஆகி கொண்டு இருக்கிறது.

இப்போது இந்த படத்தின் சில டெக்னிக்கல் வேலைகளுக்காக இந்தியன் 2 படக்குழு மொத்தமாக அமெரிக்கா சென்று விட்டது. பிளாஷ்பேக் காட்சியில் கமலை 20 வயது குறைந்தவராக காட்டுவதற்கான டெக்னாலஜி வேலைகளில் இயக்குனர் சங்கர் பிசியாக இருப்பது போன்ற புகைப்படங்கள் கூட வெளியானது. லைக்கா நிறுவன குழுவும் அமெரிக்கா சென்று இருக்கிறார்கள்.

Also Read:35 வருடத்திற்கு முன் கமல் பேசிய அரசியல் படத்தால் இயக்குனர்களான 3 பிரபலங்கள்.. காப்பை வைத்து வித்தை காட்டும் GVM

விடாமுயற்சி படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி படத்தில் யார், யார் நடிக்க வேண்டும் என்ற நடிகர்கள் மற்றும் நடிகைகளின் லிஸ்டை தயார் செய்து வைத்திருக்கிறார். ஆனால் அதை பார்த்து ஓகே சொல்லுவதற்கு லைகா குழு இப்போது இங்கு இல்லை. அவர்கள் ஓகே சொன்ன பிறகுதான் அஜித்திடம் இந்த லிஸ்டை காட்டுவார்களாம்.

படத்தில் நடிக்கக்கூடிய ஆர்டிஸ்ட்கள் உறுதியானால் தான் அவர்களுக்கான கேரக்டர் பற்றி கதையில் எழுத முடியும். மேலும் அந்த ஆர்ட்டிஸ்ட்களின் சம்பள விவரம் மற்றும் கால்சீட் விவரங்களை பெற்று அதன் பின் லைகா தன்னுடைய பட்ஜெட்டின் படி அதற்கு ஓகே சொல்ல வேண்டும். இந்தியன் 2 படத்தின் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருப்பதால் தற்போது விடாமுயற்சி படத்தின் இந்த பணி காலதாமதம் ஆகிறது.

Also Read:சிம்புவை தூக்கிவிட படாத பாடுபடும் கமல்.. செஞ்ச சத்தியத்தை காப்பாற்றும் ஆண்டவர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்