Kpy Bala: மட்டமான கேள்விக்கு செருப்படி பதில் கொடுத்த KPY பாலா.. வெள்ளையா கருப்பா, மண்டையில விழுந்த கொட்டு

Kpy Bala: தனக்கு மூன்று வேலை மட்டும் சாப்பாடு கிடைத்தால் போதும், மீதி பணம் இல்லாதவர்களுக்கு கொடுத்து விடுவேன் என்று உதவி செய்து வருபவர் தான் விஜய் டிவி KPY பாலா. இவர் ஒன்னும் வெள்ளித்திரையில் பெரிய பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பே பெறவில்லை. சின்னத்திரையிலும் ஆர்டிஸ்ட் ஆக பெயர் எடுக்கவில்லை.

ஆனாலும் தனக்கு தெரிந்த நகைச்சுவை மூலம் மற்றவர்களை சிரிக்க வைத்து பிரபலமாகிவிட்டார். அதன் மூலம் இவருக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி பணம் சம்பாதித்து வருகிறார். அப்படிப்பட்ட பணத்தை வைத்து தான் மட்டும் சந்தோஷம் இல்லாமல் இல்லாதவர்களும் சந்தோஷப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் பல உதவிகளை செய்து வருகிறார்.

பணிவான வேண்டுகோளை வைத்த KPY பாலா

அந்த வகையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவரால் முடிந்த ஊக்கத்தொகை மற்றும் கஷ்டப்படுபவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார். அத்துடன் குழந்தைகளின் கல்விக்கும் உதவி கரம் நீட்டி வருகிறார். இதனைத் தொடர்ந்து பல வழிகளில் நல்லது பண்ணிக் கொண்டு வருகிறார்.

ஆனால் எப்போதுமே நல்லது பண்றவர்களை உலகம் நம்புவதில்லை என்று சொல்வதற்கு ஏற்ப, இவர் பண்ணிய நல்லதுக்கு ஒரு அவப்பெயராக பாலா செலவழிப்பது அனைத்தும் யாருடைய கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவதற்கு தான் என்று பல பேச்சுக்கள் அடிபடுகிறது. இதற்குப் பின்னணியில் யாரோ இருந்து இந்த மாதிரி வேலை எல்லாம் பண்ண வைக்கிறார்கள் என்று ஒரு சர்ச்சை கிளம்பியது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நான் செலவழிப்பது கருப்பு பணத்தை அல்ல. நான் கஷ்டப்பட்டு வெயிலில் நின்னு கருப்பாகி சம்பாதித்த பணத்தை தான் மற்றவருக்கு உதவி செய்து வருகிறேன். தயவு செய்து இதை யாரும் தப்பாக பேச வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அத்துடன் எனக்கு பின்னாடியில் இருப்பது கஷ்டங்கள், அவமானங்கள், அசிங்கங்கள் போன்ற விஷயங்கள் மட்டும் தான்.

ஏனென்றால் இதையெல்லாம் நான் பார்த்து அனுபவித்து வந்ததனால் இந்த கஷ்டம் வேறு யாருக்கும் வரக்கூடாது என்று என் உள் மனதில் பதிந்து விட்டது. அதற்காகத்தான் என்னுடைய சாப்பாட்டுக்குப் போக இருக்கிற பணத்தை நான் உதவி பண்ணுகிறேன் என்று கூறி இருக்கிறார்.

அத்துடன் நான் பண்ணுகிற உதவிக்கு எனக்கு சப்போர்ட்டாக இருந்து உதவுவது லாரன்ஸ் மாஸ்டர் தான். அதனால் என்ன மாதிரி நல்லது பண்ண வேண்டும் என்று நினைக்கிற அவங்கள தப்பாக பேசி இல்லாமல் ஆக்கி விடாதீர்கள் என்று அனைவருக்கும் ஒரு பணிவான வேண்டுகோளை வைத்திருக்கிறார்.

கோடி கோடியாய் பணத்தை வைத்திருப்பவர்கள் ஒண்ணுமே செய்யாமல் இருக்கும் பொழுது அவர்களைப் பற்றி யாரும் எதுவும் பேச மாட்டார்கள். கொஞ்சநஞ்சமாக சம்பாதித்து தனக்குப் போக தானம் பண்ணிட்டு வரும் இந்த மாதிரி ஒரு நல்ல உள்ளங்களை காயப்படுத்தி வேடிக்கை பார்ப்பதே சில பேருடைய வேலையாக இருக்கிறது.

போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும் என்பதற்கு ஏற்ப தொடர்ந்து நல்லதே செய்து வரும் KPY பாலாவுக்கு நன்றிகள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்