சூர்யாவுக்காக சிறுத்தை சிவா செய்த பிரம்மாண்டம்.. ரஜினி, அஜித்தை டீலில் விட இதுதான் காரணம்

Siruthai Siva – Suryaa: இயக்குனர் சிறுத்தை சிவா நடிகர் கார்த்தியின் சிறுத்தை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், அஜித் குமாரை வைத்து அடுத்தடுத்து படங்கள் எடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறினார். வீரம், விவேகம், விசுவாசம், வேதாளம் என இவர் எடுத்த படங்கள் அஜித்துக்கு வெற்றி படங்களாக அமைந்தன. மேலும் சிறுத்தை சிவா குடும்ப செண்டிமெண்ட் படங்களை தான் எடுப்பார் என்ற முத்திரையும் அவர் மீது விழுந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இவர் எடுத்த அண்ணாத்தே படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. இதை ரஜினி ரசிகர்கள் எதிர்பார்க்கவே இல்லை. மேலும் சிறுத்தை சிவா இனி அவ்வளவுதான் சினிமாவில் அவரால் மீண்டும் வெற்றி படங்களை கொடுக்க முடியாது என்று சினிமா வட்டாரங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும்போது, நடிகர் சூர்யாவுடன் படம் பண்ண இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

Also Read:கங்குவாவின் மொத்த பயத்தையும் சல்லி சல்லியாக நொறுக்கிய தயாரிப்பாளர்.. பெருமூச்சு விட்ட லியோ, ஜெயிலர் படக்குழு

சிவா கலந்துகொண்ட ஒரு பேட்டியில் கங்குவா என்றால் என்ன அர்த்தம் என்று கேட்ட கேள்விக்கு நெருப்பு என்று பதில் அளித்து இருப்பார். ஆனால் உண்மையிலேயே இந்த படம் நெருப்பைப் போன்று தான் இருக்கும் என பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ஸ் வீடியோவை பார்க்கும் பொழுதே தெரிகிறது. இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

சிவா என்றால் குடும்ப செண்டிமெண்ட் படங்கள் தான் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, வரலாற்றுத் திரைப்படத்தை சூர்யாவை வைத்து இவர் எடுத்து இருக்கிறார். இது போன்ற ஒரு படத்தை ஏன் இவர் ரஜினி அல்லது அஜித்துக்கு கொடுக்கவில்லை என்று சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றன.

Also Read:ஏழாம் அறிவா, காஷ்மோராவா.? கங்குவா கெட்டப்புக்காக ரிஸ்க் எடுத்த சூர்யா.. ஊறுகாய் போல் பயன்படுத்திய சிவா

சிறுத்தை சிவாவிற்கு அந்த சமயத்தில் இது போன்ற ஒரு கதை தோன்றவில்லை, அப்படி ஒரு கதை அவருக்கு கிடைத்த பொழுது, கமல் மற்றும் விக்ரமுக்கு அடுத்து இதுபோன்ற கதைகளை ஏற்று உணர்ச்சிபூர்வமாக நடிக்கக்கூடிய நடிகர் சூர்யா தான் என்பதால் அவர் இந்த கதையை சூர்யாவை வைத்து எடுத்திருக்கிறார்.

இதனால்தான் ரஜினி மற்றும் அஜித்துக்கு இது போன்ற கதைகளை தவிர்த்து இருக்கிறார் சிறுத்தை சிவா. கங்குவா திரைப்படம் ரிலீசுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழ் சினிமாவின் வரலாற்றுப் படங்களில் முக்கியமான படமாக இது இருக்கும்.

Also Read:கங்குவா படத்தில் சூர்யாவை மிரட்ட வரும் கேஜிஎஃப் நடிகர்.. சரியாக தூண்டில் போட்ட சிறுத்தை சிவா

Sharing Is Caring:

அதிகம் படித்தவை