ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

பாண்டியன் ஸ்டோர்ஸில் வசமாக மாட்டிக் கொண்ட கண்ணன் ஐஸ்வர்யா.. வேலைக்கு ஆப்பு வைத்த மேனேஜர்

Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த மூன்று வருடமாக ஓடிய நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அதற்காக ஒவ்வொரு விஷயங்களும் விறுவிறுப்பாக வெளியே வர ஆரம்பிக்கிறது. அதில் ஐஸ்வர்யாவின் வளைகாப்புக்காக வட்டிக்கு வாங்கின விஷயம் முல்லை மூலமாக தனத்திற்கு தெரிய வருகிறது.

அதாவது ஐஸ்வர்யா மற்றும் அத்தாட்சியை ரொம்ப நாளாகவே நோட் பண்ணிக் கொண்டிருந்த முல்லை, தற்பொழுது பணம் கொடுக்கும் பொழுது பார்த்து விடுகிறார். இந்த விஷயத்தை தனத்திடம் சொல்கிறார். அதாவது ஐஸ்வர்யா கட்டு கட்டாக அத்தாட்சிக்கு பணம் கொடுக்கிறார். இதில் ஏதோ வில்லங்கம் இருப்பது போல் தெரிகிறது, என்னவென்று கேளுங்கள் என்று கூறுகிறார்.

Also read: சொத்துக்காக பொட்டி பாம்பாக அடங்கும் குணசேகரன்.. ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்தும் ஜீவானந்தம்

அப்பொழுது தனம் வீட்டிற்கு வந்த அத்தாட்சியிடம் உங்களுக்கு ஐஸ்வர்யா பணம் கொடுக்கிறார் என்ன விஷயம் என்று கேட்கிறார். அதற்கு எப்படியாவது சமாளித்து விடலாம் என்று அதெல்லாம் ஒன்னும் இல்லையே என்று சொல்கிறார். ஆனாலும் தனம், எல்லாம் எனக்கு தெரியும் என்னவென்று உண்மையை இப்பவே சொல்லி விடுங்கள் என்று கொஞ்சம் கராராக கேட்ட பொழுது ஐஸ்வர்யா வளைகாப்புக்காக வாங்கின கடன் விஷயத்தை சொல்லி விடுகிறார்.

இதைக் கேட்ட அதிர்ச்சியில் தனம், ஐஸ்வர்யாவை கூப்பிட்டு நீ கடன் வாங்கினியா என்று கேட்கிறார். இதை எதிர்பார்க்காத ஐஸ்வர்யா, தனம் அப்படி கேட்டதும் ஷாக் ஆகி முழிக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க கண்ணன் பேங்கில் லஞ்சம் வாங்கிக் கொண்டிருக்கிறார் என்ற விஷயம் இவருடைய உயர் அதிகாரிக்கு தெரிந்து விடுகிறது.

Also read: படப்பிடிப்பு தளத்தில் நடிகருடன் குணசேகரனுக்கு ஏற்பட்ட வாக்குவாதம்.. திடீரென விலகிய மாரிமுத்து

அப்பொழுது அவருக்கு தோன்றின ஒரே விஷயம் என்னமோ நீ ரொம்ப நல்லவன் மாதிரி நான் லஞ்சம் வாங்கினதற்காக என்னைய போலீசிடம் மாட்டி விட்டுட்டு, இப்போ நீ லஞ்சம் வாங்குறியா என்று மனதிற்குள் திட்டத்தை தீட்டுகிறார். இனி கண்ணன் அடுத்த முறை லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக போலீஸிடம் மாட்டிக்கொள்ளப் போகிறார்.

ஆக மொத்தத்தில் ஐஸ்வர்யா கண்ணன் போட்ட ஆட்டத்திற்கு சரியான பாடம் கிடைக்கப் போகிறது. இதற்கிடையில் தனம் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குடும்பத்தில் உள்ளவரிடம் சொல்லாமல் தவித்து வருகிறார். அத்துடன் தனக்கு பிறகு தன் குழந்தையை யார் பார்த்துப்பார்கள் என்று அவ்வப்போது டெஸ்ட் வைத்து கொண்டு வருகிறார். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி ஆக கூடிய விரைவில் இந்த நாடகத்திற்கு சுபம் போட்டுவிட்டு கிழக்கு வாசல் நாடகம் வர இருக்கிறது.

Also read: நாக்கை தொங்க போட்டு அலையும் கோபி.. இந்த விஷயத்தில் பாக்கியாவை மிஞ்ச முடியாமல் தவிக்கும் ராதிகா

- Advertisement -spot_img

Trending News