நாக்கை தொங்க போட்டு அலையும் கோபி.. இந்த விஷயத்தில் பாக்கியாவை மிஞ்ச முடியாமல் தவிக்கும் ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடரில் கதையே இல்லாமல் கோபியின் நடிப்பை மட்டுமே வைத்து நாடகத்தை உருட்டி வருகிறார்கள். அதாவது கோபியிடம் விட்ட சவாலில் ஜெயிப்பதற்காக கல்யாணம் ஆர்டரை எடுத்து சமையல் செய்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ராதிகாவும் கோபியும் அந்த பங்க்ஷனில் கலந்து கொள்கிறார்கள்.

அப்பொழுது கோபிக்கு, பாக்கியா மற்றும் பழனிச்சாமி இங்கே இருப்பது வயித்தெரிச்சலை கொடுக்கிறது. அவ்வப்போது இவர்களை பார்க்கும் பொழுதெல்லாம் புலம்பித் தவிக்கிறார். இதனால் எதற்காக ராதிகாவுடன் வந்தோமோ அந்த சந்தோஷத்தை இழந்து விட்டு பைத்தியம் மாதிரி பாக்கியா பின்னாடியே போய் நோட்டம் போட்டு வருகின்றார்.

Also read: டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் டாப் 5 சீரியல்கள்.. விஜய் டிவியை மொத்தமாக பின்னுக்கு தள்ளிய சன் டிவி

இதை தெரிந்த பாக்கியா ரொம்பவே கடுப்பாகி இதுதான் உங்களுக்கு நான் கொடுக்கிற லாஸ்ட் வார்னிங். இதுக்கு மேலயும் என் ரூட்டுல நீங்க கிராஸ் பண்ணீங்கன்னா உங்களை
என்ன பண்ணுவேன்னு தெரியாது என்று அடாவடியாக பேசி விட்டார். மறுபக்கம் இதையெல்லாம் கவனித்த ராதிகா, கோபியை வெளுத்து வாங்கி விடுகிறார்.

ஆக மொத்தத்துல ரெண்டு பொண்டாட்டிக்கு நடுவில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார். என்ன தான் கோபி, பாக்கியாவை வேண்டாம் என்று உதறித் தள்ளிவிட்டு வந்தாலும் அவருடைய சமையலுக்கு இன்னமும் அடிமையாக தான் இருக்கிறார். அதற்காக பாக்கியா பின்னாடியே நாக்க தொங்க போட்டு கொண்டு அலைகிறார். பாக்யாவிடம் இருக்கும் மிகப்பெரிய பிளஸ் என்னவென்றால் அவருடைய சமையல்தான்.

Also read: மானம் மரியாதை சூடு சொரணை இல்லாமல் திரியும் குணசேகரன்.. கழுவி கழுவி ஊத்திய மருமகள்கள்

இந்த விஷயத்தில் இவருடன் போட்டி போட்டு யாராலயும் ஜெயிக்க முடியாது. அதிலும் ராதிகாவுக்கு சமையல் சுட்டு போட்டாலும் வராது. இதனாலையே கோபி, பாக்கியாவை சுற்றி சுற்றி வருகிறார். அத்துடன் பாக்கியா இந்த சமையல் ஆர்டரை நல்லபடியாக முடித்து விட்டால் கடனை திருப்பி அடைத்து விடுவார் என்ற பயத்தினால் கோபி சகுனி வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்.

அதாவது பெண் வீட்டார்களிடம், மலேசியாவில் இருந்து உங்க சொந்தக்காரர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு ஏற்ற மாதிரி அந்த சாப்பாட்டை சமைத்துக் கொடுங்கள் என்று சொல்கிறார். அவர்களும் இது நல்ல ஐடியாவாக இருக்கு என்று சொல்லி பாக்யாவிடம் மெனு கொடுக்க போகிறார்கள். இதை பார்த்த கோபி உள்ளுக்குள் ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்கிறார். எப்படியும் பாக்கியா இந்த கல்யாண ஆர்டரை நல்லபடியாக செய்து முடிப்பார் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே.

Also read: நிஜமான பரியேறும் பெருமாளாக அவமானப்பட்டவர் இவர்தான்.. உண்மையை போட்டு உடைத்த எதிர்நீச்சல் குணசேகரன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்