திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

சொத்துக்காக பொட்டி பாம்பாக அடங்கும் குணசேகரன்.. ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்தும் ஜீவானந்தம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் நாளுக்கு நாள் எதிர்பார்க்காத திருப்பங்களுடன் விறுவிறுப்பாகி வருகிறது. இத்தனை நாள் ஜீவானந்தம் எங்கே போனார் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது கௌதமை சந்திக்கிறார். அந்த வேளையில் அப்பத்தா விஷயத்தை கிளற ஆரம்பித்து விட்டார்.

அப்பொழுது ஜீவானந்தம், அப்பத்தாவிடம் இருந்து கைரேகையை எடுத்த பிறகு ஜனனி எந்த போனும் பண்ணவில்லை அப்படித்தானே என்று கேட்கிறார். அப்பொழுது ஜனனிப் பெயரை எடுத்ததும் கௌதம் ஷாக் ஆகி முழிக்கிறார். இதற்கு அடுத்து கௌதம், ஜனனி என்னுடைய தோழி தான் என்று எல்லா விஷயத்தையும் ஜீவானந்தம் இடம் எடுத்து சொல்லப் போகிறார்.

Also read: நாக்கை தொங்க போட்டு அலையும் கோபி.. இந்த விஷயத்தில் பாக்கியாவை மிஞ்ச முடியாமல் தவிக்கும் ராதிகா

அத்துடன் ஆதிரைக்கு நடந்த அநியாய கல்யாணத்தைப் பற்றியும் கண்டிப்பாக சொல்ல வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே ஜீவானந்தம் கேரக்டர் கஷ்டப்படும் ஏழைகளுக்கு அவர்களுடைய சொத்தை பணக்காரர்களிடமிருந்து பிடுங்கி கொடுப்பதுதான். அந்த வகையில் தான் அப்பத்தா இவரிடம் அனைத்து விஷயங்களையும் சொல்லி உதவி கேட்டிருந்திருப்பார்.

அதற்காகத்தான் யாருக்கும் தெரியாமல் அப்பத்தாவின் கைரேகையை எடுத்துவிட்டு கமுக்கமாக அந்த சொத்தை சேர வேண்டிய மருமகளுக்கு பிரித்துக் கொடுக்க முயற்சி செய்து வருகிறார். அடுத்ததாக ஆதிரை கல்யாண விஷயத்திலும் இவரின் பங்கு இருக்கும். ரிஜிஸ்டர் ஆபீஸில் கரிகாலன் கூட நடந்த முறையற்ற திருமணத்தை ரத்து செய்யும் விதமாக ஏதாவது குளறுபடி செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

Also read: படப்பிடிப்பு தளத்தில் நடிகருடன் குணசேகரனுக்கு ஏற்பட்ட வாக்குவாதம்.. திடீரென விலகிய மாரிமுத்து

மேலும் ஆடிட்டருக்கு சொத்து விஷயத்தில் ஏதோ ஒரு வகையில் தெரிந்த பிறகு தான் குணசேகரன் இடம் எச்சரிக்கையாக இருக்க சொல்லிருக்கிறார். அவரும் அந்த ஒரு காரணத்திற்காக அவர்கள் வீட்டில் இருக்கும் பெண்களிடம் பொட்டி பாம்பாக அடங்கி போய் இருக்கிறார். இதனை அடுத்து சொத்துக்கள் அனைத்தும் அந்த வீட்டில் உள்ள மருமகளிடம் சேர்க்கும் பொறுப்பை ஜீவானந்தம் ஸ்கெட்ச் போட்டு சரியாக செய்து வருகிறார்.

ஆக மொத்தத்தில் எல்லா முடிச்சுகளையும் அவிழ்த்து குணசேகரனின் மூஞ்சியில் கரிய பூச போகிறார் ஜீவானந்தம். எது எப்படியோ கண்டிப்பாக ஜீவானந்தம் மூலம் இந்த இரண்டு விஷயங்கள் நடக்க இருக்கிறது. ஆதிரை வாழ்க்கையும் காப்பாற்றப் போகிறார், அப்பத்தா ஆசைப்பட்ட மாதிரி சொத்துக்கள் குணசேகரன் கையில் போகாமல் தடுக்க போகிறார். இனி வரும் எபிசோடுகள் இன்னும் விறுவிறுப்பாக போக இருக்கிறது.

Also read: மானம் மரியாதை சூடு சொரணை இல்லாமல் திரியும் குணசேகரன்.. கழுவி கழுவி ஊத்திய மருமகள்கள்

- Advertisement -

Trending News