முட்டி மோதும் பிரேமம் பட இயக்குனர்.. படுதோல்விக்கு பின் ரீ என்ட்ரியில் உருவாகும் அடுத்த படம்

Director Alphonse Puthren: மலையாள மொழி படங்களில், காதல் நகைச்சுவை படமாய் வெளிவந்து வெற்றி கண்ட படம் தான் பிரேமம். இந்நிலையில் இப்பட இயக்குனர் மேற்கொள்ளும் அடுத்தகட்ட படத்தின் அப்டேட் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இப்படத்தில் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்றி நடித்திருப்பார்கள். இப்படத்தின் மூலம் நல்ல விமர்சனங்களை பெற்றவர் தான் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.

Also Read: 40 படங்களில் நடித்த மும்தாஜின் மொத்த சொத்து மதிப்பு.. கவர்ச்சிக்காகவே கல்லா கட்டிய நடிகை

அவ்வாறு 2013ல் நிறம் என்னும் படத்தை மேற்கொண்ட இவர் பெரிதும் பேசப்படாத நிலையில், பிரேமம் படமே இவரது வெற்றி படமாக அமைந்தது. அதை தொடர்ந்து 2022ல் பிரித்திவிராஜ், நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோல்ட் என்னும் படமும் படும் தோல்வியை சந்தித்தது.

தற்பொழுது ரெமோ பிக்சர்ஸ் தயாரிப்பில் இவர் மேற்கொள்ளும் அடுத்த படம் தான் கிப்ட். இப்படத்தில் சாண்டி, கோவை சரளா, சஹானா சர்வேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அதிலும் முக்கியமாக இசைஞானி இளையராஜா 7 பாடலுக்கு இசையமைக்க உள்ளார்.

Also Read: கார், பைக் என அள்ளிய 6 இயக்குனர்கள்.. சம்பளம் போக சைடு கேப்பில் சிந்து பாடும் லோகேஷ்

மேலும் தமிழ் சினிமாவில் சிறந்த நடன இயக்குனராய் வலம் வருபவர் தான் சாண்டி. இவரின் நடனம் இடம் பெற்ற பல படங்கள் வெற்றியை கண்டுள்ளது. அவ்வாறு சிறந்த நடன இயக்குனராக இருக்கும் இவர் தற்பொழுது சினிமாவில் நடிக்கும் வாய்ப்பினை பெற்று வருகிறார்.

அதைத் தொடர்ந்து அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் கிப்ட் படத்தில் களம் இறங்க உள்ளார். இவர் ஏற்கும் கதாபாத்திரம் குறித்து எந்த தகவலும் வெளிவராத நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படும் தோல்வியை சந்தித்து முட்டி மோதும் அல்போன்ஸ் புத்திரனுக்கு இப்படம் வெற்றி பெற சினிமா வட்டாரங்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Also Read: துக்கம் தொண்டையை அடைக்கும் அளவிற்கு அழும் வனிதா.. கூடிய சீக்கிரம் நானும் வரேன்!

- Advertisement -spot_img

Trending News