செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

“உயிர் மட்டும் இல்ல, ஹார்ட், லிவர், கிட்னி எல்லாமே உங்களுடையது தேவி”.. த்ரிஷா நடிப்பில் மறக்க முடியாத 5 கேரக்டர்கள்

நடிகை த்ரிஷா மிஸ் சென்னை என்னும் பட்டத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தவர். அடுத்தடுத்து வெற்றி படங்கள் கொடுத்து சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கும் த்ரிஷாவுக்கு 40 வயது ஆகிவிட்டது என்று அவரே சொன்னால் தான் தெரியும். அந்த அளவுக்கு இளமையுடன் இன்றும் இருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மீண்டும் ஒருமுறை த்ரிஷா என்றுமே தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னி தான் என்பதை நிரூபித்து இருக்கிறது. த்ரிஷாவின் நடிப்பில் இந்த ஐந்து கேரக்டர்களை என்றுமே யாராலும் மறந்து விட முடியாது.

கில்லி: நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் எடுத்த படம் கில்லி. இன்றுவரை தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங் தன் கைவசம் வைத்திருக்கும் இந்த படத்தில் த்ரிஷா நடித்த தனலட்சுமி கேரக்டர் இன்றுவரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. இந்தப் படம் விஜய்க்கு மட்டுமல்லாமல் த்ரிஷாவுக்கும் ஒரு பிரேக் கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

Also Read:சம்பாதிப்பதற்கு மட்டும் தான் தமிழ்நாடு.. சென்னையில் இருக்க கூடாது என மகனை தொந்தரவு செய்யும் பொன்னியின் செல்வன் நடிகர்

96: தன்னுடைய மார்க்கெட் கொஞ்சம் டல்லாகி கொண்டிருக்கும் பொழுது வந்த வாய்ப்பை த்ரிஷா சரியாக பயன்படுத்திக் கொண்டது தான் 96 திரைப்படம். இந்த படத்தில் இவர் நடித்த அந்த ஜானு கேரக்டர் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மீண்டும் த்ரிஷா ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டார்.

பொன்னியின் செல்வன்: த்ரிஷா தான் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் குந்தவை என்னும் பொழுது நிறைய பேருக்கு அவருடைய நடிப்பின் மீது சந்தேகம் வந்திருக்கக்கூடும். ஆனால் படம் ரிலீஸ் ஆன பிறகு குந்தவை என்னும் கதாபாத்திரத்தை த்ரிஷாவை தவிர வேறு யாராலும் சரியாக பண்ணி விட முடியாது என்று ரசிகர்களே சொல்லும் அளவிற்கு த்ரிஷா நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் தன்னுடைய இளமையும், அழகும் இன்னும் மெருகேறி காணப்பட்டார். இந்த படத்திற்குப் பிறகு த்ரிஷாவின் ரசிகர்கள் கூட்டம் இன்னும் அதிகமாகி இருக்கிறது.

Also Read:வம்சத்தை கருவறுக்க காத்திருந்த நந்தினி.. நேருக்கு நேர் சந்தித்த ஆதித்த கரிகாலன், மிரட்டிவிட்ட பொன்னியின் செல்வன் 2

விண்ணை தாண்டி வருவாயா: த்ரிஷா தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இனி எத்தனை கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தாலும், கார்த்திக்கின் ஜெஸ்ஸியை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்து விட முடியாது. காட்டன் புடவை, ஒப்பனை இல்லாத வசீகரமான முகம் என படம் முழுக்க எந்த சலனமும் இல்லாமல் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

சாமி: படம் ரிலீஸ் ஆகி பல ஆண்டுகள் கழித்தும் இன்று வரை த்ரிஷாவுக்கு மாமி நடிகை என்பது அடைமொழியாகவே மாறிவிட்டது. ரொம்பவும் குடும்பப்பாங்கான கேரக்டரில் தன்னுடைய அழகும், நடிப்பும் ரசிகர்கள் மனதில் நிற்கும் அளவுக்கு இந்த படத்தில் அவர் நடித்திருப்பார்.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மேலும் எதிர்பார்ப்பு கூடும் வகையில் பல வருடங்களுக்குப் பிறகு த்ரிஷா தளபதி விஜய் உடன் இணைந்து லியோ படத்தில் பணியாற்றி வருகிறார். தமிழ் சினிமாவின் வெற்றி ஜோடிகளான இவர்கள் இருவரது கெமிஸ்ட்ரியையும் தியேட்டரில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார்கள்.

Also Read:திரிஷாவுக்கு பொருத்தமான ஜோடியாக நடித்த 5 நடிகர்கள்.. நிஜத்திலும் வளைத்து போட நினைத்த சிம்பு

- Advertisement -

Trending News