கங்கை அமரனை வெறுத்து ஒதுக்கிய கனகா.. கதவை பூட்டி விரட்டி அடித்த சம்பவம்

Old actress Kanaka: மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு, உன்னை மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு. இந்தப் பாடலை எப்ப கேட்டாலும் கண்ணு முன்னாடி இளையராஜா வந்து விட்டுப் போவார். ஆனால் அதை தாண்டி எண்பதுகளில் தன்னுடைய இளமை காலங்களை கழித்தவர்களுக்கு கண் முன் வந்து போவது நடிகை கனகாவா தான் இருப்பார்.

இரட்டை ஜடை, ஜடை சுற்றிய மல்லிகை பூ, பாவாடை தாவணி, ஆளை விழுங்கி விடும் இது அத்தனைக்கும் சொந்தக்காரி தான் கனகா. அவருடைய கண்ணின் பவரை வைத்து தான் படத்தின் பாதி வசனங்களை கண்களாலேயே பேச வைத்திருப்பார் கங்கை அமரன்.

அண்ணனுடைய இசையில் கங்கை அமரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கிய கரகாட்டக்காரன் படம் 1989 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. கிட்டத்தட்ட ஒரு வருடம் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. கனகாவை பார்ப்பதற்காக கூடிய கூட்டமும் இதில் அதிகம்.

அறிமுகமான முதல் படமே இப்படி ஒரு சாதனை படமாக கனகாவுக்கு அமைந்தது. ஆனால் இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த கங்கை அமரனை கனகா வெறுத்து ஒதுக்கிய சம்பவம் நடந்து இருக்கிறது. கரகாட்டக்காரன் படத்திற்கு பிறகு ரஜினிகாந்த், கார்த்திக், பிரபு என அப்போதைய முன்னணி ஹீரோக்கள் எல்லோருடன் ஜோடி சேர்ந்து நடித்தார் கனகா.

1996 க்கு பிறகு 3வருடங்கள் பிரேக்கில் இருந்த கனகா 1999 மற்றும் 2000 வருடத்தில் ஒரு சில படங்களில் நடித்தார். அதன் பின்னர் கனகா என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியாது. திடீரென ஒரு நாள் கனகா ஏதோ ஒரு வீட்டு பிரச்சனை சம்பந்தமான வழக்கில் மீடியா முன்பு தோன்றினார்.

கனகா என்ன இப்படி ஆகிவிட்டார் என ரசிகர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார்கள். கனகாவுக்கு உடல் பிரச்சினை மட்டுமில்லாமல் மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனையும் அதிகமாக இருந்தது. அப்படி ஒரு சமயத்தில் கனகாவை தன் வீட்டில் வைத்து பராமரிக்க விரும்பி இருக்கிறார் இயக்குனர் கங்கை அமரன்.

கதவை பூட்டி விரட்டி அடித்த சம்பவம்

இதற்காக கனகாவின் வீட்டுக்கும் போயிருக்கிறார். ஆனால் கனகாவுக்கு கங்கை அமரன் யார் என்றே தெரியவில்லை. கங்கை அமரனை பார்த்ததும் தன்னுடைய அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டாராம் கனகா.

தன்னை யார் என்று ஞாபகப்படுத்த கங்கை அமரன் மாங்குயிலே பூங்குயிலே, இந்த மான் உந்தன் சொந்த மான் என்ற பாட்டு எல்லாம் பாடி காட்டினாராம்.

ஆனால் கனகாவுக்கு எதுவுமே ஞாபகம் இல்லையாம். தன்னுடைய அப்பா மற்றும் கணவரால் ஏற்பட்ட மனக்கசப்புதான் கனகாவுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டதற்கு காரணம். அவரை பார்க்கும் போது எப்படி இருக்க வேண்டிய ஹீரோயின் இப்படி ஆகிவிட்டாரே என்று தான் தோன்றுகிறது.

முத்து முத்து கண்ணால உன்னை சுத்தி வந்தன் பின்னால என்ற வரியை அவருடைய கண்களுக்காகவே எழுதி இருப்பார் கங்கை அமரன். ஆனால் அந்த கங்கை அமரனையும், தன்னுடைய சூப்பர் ஹிட் படமான கரகாட்டக்காரனையும் கூட அவருக்கு ஞாபகம் இல்லாததுதான் கொடுமை.

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்