Entertainment | பொழுதுபோக்கு
சந்திரமுகியில் நடித்த வினித் என்ன ஆனார்.! தற்போதைய நிலை என்ன.?
நடிகர் வினித் 1992 ம் ஆண்டு ஆவாரம்பூ என்ற படத்தில் சக்கரை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த கதாபாத்திரம் இன்று வரை பேசபடுகிறது. நடிகர் வினித் கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவரின் குடும்பம் கண்ணூரில் மிக பிரபலமான குடும்பம் அப்பா கே.டி ராதாகிருஷ்ணன் ஒரு வழக்கறிஞர் ஆவார். அம்மா சாந்தகுமாரி ஒரு டாக்டர். நடிகர் வினித் நாட்டியப் பேரொளி பத்மினிக்கு சொந்தக்காரர் ஆவார்.
அதனால் தான் நடிகர் வினித் சிறுவயதில் இருந்தே பரதநாட்டியத்தில் கை தேர்ந்தவராக வளர்ந்துள்ளார். இவர் கேரளாவில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக இளைஞர் விழாவில் கலந்து கொண்டு நாட்டியம் ஆடி விருதினை பெற்றுள்ளார்.
அதேபோல் சூப்பர்ஸ்டார் ரஜினி படமான சந்திரமுகி படத்தில் நடிகர் வினித் செம்மயாக பரதம் ஆடியிருப்பார். அதேபோல் ஆவாரம்பூ படத்தில் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதினை பெற்றவர் வினித்.

vineeth
அதன் பிறகு, ஜெண்டில் மேன், ஜாதி மல்லி, மே மாதம், காதல் தேசம் சக்தி ஆகிய படங்களில் ஹீரோவாகவும் காதல் கிறுக்கன், பிரியமான தோழி, சந்திரமுகி என பல தமிழ் படங்களில் துணை நடிகராகவும் நடித்து அசத்தி வந்தார் வினித்.
மேலும் இவர் 100 படங்களுக்கு மேல் டான்ஸ் கொரியோகிராபராக இருந்துள்ளார், இவர் கடைசியாக கம்போஜி என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். பின்பு இவருக்கு 2004 ம் ஆண்டு பிரசில்லா மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார் இவர்களக்கு அவந்தி என்ற பெண்குழந்தை உள்ளது. இவர் தற்பொழுது நல்ல கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்திற்கு சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட்காண கேரளா தேசிய விருது வாங்கியுள்ளார்.
