விருதுகளை குறிவைத்து விஜய்சேதுபதி நடித்த 5 படங்கள்.. வினோதமான நடிப்பில் அசத்திய சூப்பர் டீலக்ஸ் ‘ஷில்பா’

நடிகர் விஜய் சேதுபதி கோலிவுட்டின் கடைக்கோடியில் இருந்து இன்று முன்னேறி டாப் ஹீரோவாக இருப்பவர். அடுத்தடுத்து வெற்றி படங்கள் கொடுத்து இன்று ரசிகர்களின் மனதில் மக்கள் செல்வனாக உயர்ந்திருக்கிறார். விஜய் சேதுபதி பல கமெர்சியல் படங்களில் நடித்தாலும் அவ்வப்போது தன்னுடைய நடிப்புக்கு தீனி போடும் வகையிலும், விருதுகளை குறி வைத்தும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஆரஞ்சு மிட்டாய்: இயக்குனர் பிஜூ விஸ்வநாத் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி தயாரித்து, நடித்த திரைப்படம் ஆரஞ்சு மிட்டாய். இந்த படத்தில் விஜய் சேதுபதி கைலாசம் என்னும் கதாபாத்திரத்தில் மிகவும் வயதானவராக நடித்திருந்தார். வயதான விஜய்சேதுபதியை, ரமேஷ் திலக் தன்னுடைய ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் நடக்கும் கதை தான் இந்த படம்.

Also Read: ஜெய்சங்கர் போல் விஜய் சேதுபதிக்கு வந்த நிலைமை.. அந்த 2 படத்தால் மொத்த கேரியருக்கும் வந்த சோதனை

சீதக்காதி: நாடக கலையை மைய்யமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் சீதக்காதி. இந்த படத்தை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி நாடக கலைஞராக தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மௌலி, அர்ச்சனா, ராஜ்குமார் ஆகியோரும் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

சூப்பர் டீலக்ஸ்: தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் இதுவரை ஏற்று நடிக்காத கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். விஜய் சேதுபதி ஷில்பா என்னும் திருநங்கையாக நடித்த இந்த படத்தை இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருந்தார். திருநங்கைகளுக்கு சமூகத்தில் நடக்கும் அவலங்களை அப்படியே கண் முன் காட்டியிருந்தார் விஜய் சேதுபதி.

Also Read: அடுத்தடுத்து தயாரிப்பாளர்களை காலி செய்த விஜய் சேதுபதி.. உதவி செய்ய வந்து உபத்திரவமான கதை

சூது கவ்வும்: இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரத்தில் காமெடியில் கலக்கிய திரைப்படம் சூது கவ்வும். விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன், ராதாரவி மற்றும் எம். எஸ். பாஸ்கர் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

கடைசி விவசாயி: ஆண்டவன் கட்டளை திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் கடைசி விவசாயி. விஜய் சேதுபதி இந்த படத்தில் குறிப்பிட்ட காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ஒரு விவசாயியை சுற்றி நடக்கும் கதைக்களம் தான் கடைசி விவசாயி திரைப்படம்.

Also Read: கெத்து காட்ட நினைத்த விஜய் சேதுபதி.. கடைசியில் மொத்தமாய் போன பரிதாபம்

Next Story

- Advertisement -