வேற பாதையை நோக்கி செல்லும் எஸ்ஜே சூர்யா.. சலிப்புத் தட்டியதன் விளைவு

SJ Surya Chose A Different Path: தமிழ் சினிமாவில் தொடக்கத்தில் இயக்குனராகவும் இப்போது நடிப்பு அரக்கனாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் எஸ்ஜே சூர்யா. இவர் மாநாடு, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இருப்பினும் இப்போது எஸ்ஜே சூர்யா வேறு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். தெலுங்கில் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படத்தில் வில்லனாக நடித்து அறிமுகமான எஸ்ஜே சூர்யா, அதன் தொடர்ச்சியாக ராம்சரனின் கேம் சேஞ்சர் , நானியின் சரிபோதா சனிவாரம் போன்ற நேரடி தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இப்போது மலையாளத் திரை உலகிற்கும் எஸ்ஜே சூர்யா அறிமுகமாகிறார். சமீப காலமாகவே எஸ்ஜே சூர்யாவின் மீது தமிழ் ரசிகர்களுக்கு சலிப்பு தட்டி விட்டது. இவர் நடிப்பு, இப்படி தான் இருக்கும் என்ற மனநிலைக்கு வந்து விட்டனர். தொடர்ந்து ஒரே மாதிரி வில்லன் கேரக்டர்களில் நடித்து போரடிக்க வைத்து விட்டார்.

Also Read: எஸ்ஜே சூர்யாவுக்கு இப்படி ஒரு மனநோயா.? பயில்வான் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ரூட்டை மாற்றிய எஸ்ஜே சூர்யா

விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படம் எஸ்ஜே சூர்யாவால் தான் கொஞ்சமாவது ஓடியது என்று இவரது நடிப்பை ஆஹா ஓகோன்னு புகழ்ந்து பேசினார்கள். ஆனால் இப்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்திருந்தார்.

ஆனால் மார்க் ஆண்டனியின் பெரிதாக பேசப்பட்ட இவருடைய நடிப்பு, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் எடுபடல. தொடர்ந்து ஒரே மாதிரியான நடிப்பை காட்டி சலிப்புத் தட்ட வைத்திருக்கிறார். ரசிகர்களின் கமெண்ட் எப்படியோ எஸ்ஜே சூர்யாவின் காதுக்கு எட்டிவிட்டது. இதனால் தன்னுடைய ரூட்டையே மாற்றிவிட்டார்.

படத்தில் இவருடைய கேரக்டர் வித்தியாசமாக இருக்க வேண்டும், அதற்கு சம்பளம் கூட வேண்டாம் என்று அதிரடியாக கூறியிருக்கிறார். சம்பளத்தை மிகவும் குறைத்த எஸ்ஜே சூர்யா, இப்போது வித்தியாசமான கேரக்டரில் மலையாளத்தில் நடிகர் சுரேஷ் கோபியுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சுரேஷ் கோபியின் 251-வது படத்தில் வில்லனாக எஸ்ஜே சூர்யா நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குனர் ராகுல் ராமச்சந்திரன் இயக்குகிறார்.

Also Read: எஸ்ஜே சூர்யாவுக்கு அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்பு.. பிரம்மாண்ட படத்தில் இணைந்த சம்பவம்