ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

எஸ்ஜே சூர்யாவுக்கு இப்படி ஒரு மனநோயா.? பயில்வான் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

SJ Surya: எஸ்ஜே சூர்யாவை தெரிந்த எல்லோருமே சொல்லக்கூடிய ஒரு விஷயம் என்றால் அவர் ஒரு வித்தியாசமான ஆள் என்பதுதான். எல்லோரும் ஒரு விஷயத்தை ஒரு பார்வையில் பார்த்தால் எஸ்ஜே சூர்யாவின் பார்வையை முற்றிலும் வேறு விதமாக இருக்கும். இதுதான் அவருடைய வெற்றிக்கான காரணம் என்று கூட சொல்லலாம்.

சமீபத்தில் மார்க் ஆண்டனி படம் வெளியாகி மொத்த ஸ்கோரையும் எஸ்ஜே சூர்யா தட்டி சென்றார். இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் எஸ்ஜே சூர்யாவுக்கு ஒரு விதமான மனநோய் இருப்பதாக கூறியிருக்கிறார். அதுவும் இதை தான் சொல்லவில்லை விஷாலே வெளிப்படையாக பேசி இருப்பதாக பலமுறை ஆணித்தரமாக சொல்லி உள்ளார்.

Also Read : 100 கோடி வசூல் செய்தாலும் அனகோண்டாவுக்கு பிரயோஜனம் இல்ல.. கேரியரை கிளோஸ் செய்த எஸ்ஜே சூர்யா

அதாவது ஆதிக் ரவிச்சந்திரன் சரியான கதாபாத்திரத்தை தான் எஸ்ஜே சூர்யாவுக்கு கொடுத்திருக்கிறார். நிஜத்திலும் அவர் அப்படிதான், சாதாரணமாக சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் எஸ்ஜே சூர்யா திடீரென ஒருவரிடம் கத்துவார். இதை சரியாக மார்க் ஆண்டனி படத்தில் எஸ்ஜே சூர்யாவை பயன்படுத்தி உள்ளார்கள்.

மேலும் ஒரு முறை தனது உதவியாளரிடம் மது அருந்துவதற்காக கிளாஸ் எடுத்து வர சொல்லி இருக்கிறார். அப்போது இந்த கிளாஸ் கழுவியாச்சா என்று கேட்டவுடன் புதுசு தான் என்று உதவியாளர் கூறியிருக்கிறார். அதனால் என்ன கழுவ கூடாதா போய் கழுவி விட்டு வா என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்.

Also Read : எஸ்ஜே சூர்யாவை டீலில் விட்ட வெங்கட் பிரபு.. விஜய் உடன் மோத போகும் ஹாண்ட்சம் வில்லன்

அதன் பிறகும் எஸ்ஜே சூர்யா நம்பிக்கை இல்லாமல் தான் பார்க்கும்படி அந்த கிளாஸை கழுவ சொல்லி இருக்கிறார். இப்படி ஒரு மனநோய் எஸ்ஜே சூர்யாவுக்கு இருப்பதாக விஷாலே வெளிப்படையாக கூறியுள்ளார் என பயில்வான் கூறுகிறார். மேலும் இந்த மன நோய்க்கு பெயர் ஓசிடி என்பதாம்.

அதுவும் விஷால் எஸ்ஜே சூர்யாவுக்கு ஓசிடி பிரச்சனை இருப்பதை மனவருத்தத்துடன் கூறியிருந்தாராம். இதை அறிந்த எஸ்ஜே சூர்யா ரசிகர்கள் இப்போது வருத்தத்தில் இருக்கின்றனர். மேலும் அந்த வீடியோவில் பயில்வான் இந்த விஷயத்தை விஷால் தான் சொன்னார் என்று பலமுறை கோடிட்டு தன்னை காப்பாற்றிக் கொண்டார்.

Also Read : வெற்றிமாறனின் சூப்பர் ஹிட் படத்தை பிடுங்கிய தனுஷ்.. எஸ்ஜே சூர்யா கூட்டணியில் 50வது படம்

- Advertisement -

Trending News