மீண்டும் மருதநாயகத்தை கையில் எடுக்கும் கமல்.. ஹீரோவாக நடிக்க இருக்கும் மாஸ் நடிகர்

உலகநாயகன் கமலஹாசனை பொறுத்தவரை சினிமா என்பது அவருடைய மிகப்பெரிய கனவு என்றே சொல்லலாம். அவரது படங்களின் மூலம் எடுக்காத புதிய முயற்சிகளே இல்லை. தன்னால் முடிந்தவரை ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான வித்தியாசத்தை காட்டக் கூடியவர். உலக சினிமாவே இவரை வியந்து தான் பார்க்கின்றது.

அப்படிப்பட்ட உலகநாயகன் கமலஹாசனுக்கே கனவு படமாக இருப்பது மருதநாயகம் தான். 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படம் பொருளாதார காரணத்தால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஆனால் இன்றளவும் கமல் இந்தப் படத்தை மீண்டும் ஆரம்பிக்க மாட்டாரா என்ற ஏக்கம் ரசிகர்களுக்கு மட்டுமில்லை சினிமா கலைஞர்களுக்கும் உண்டு.

Also Read: தமிழர்களுக்கு தெரியாத மாவீரன்.. மருதநாயகத்திற்காக வாழ்நாள் ரிஸ்க் எடுத்த கமல்ஹாசன்

1997 ஆம் ஆண்டு இந்த கதை சுஜாதாவால் எழுதப்பட்டது. கமலே இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதோடு தானே தயாரிப்பதாகவும் சொல்லியிருந்தார். மேலும் இந்த படத்திற்கு இயக்குனரும் கமலஹாசன் தான். இந்த படத்தின் தொடக்க விழாவிற்கு அப்போதைய இங்கிலாந்தின் ராணி எலிசபெத் கூட வந்திருந்தார். அந்த நிகழ்வு ஒட்டுமொத்த சினிமா உலகையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஆனால் பணச்சிக்கல் காரணமாக இந்த படம் பாதியிலேயே எடுக்கப்பட்டது. கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்குப் பின்னரும் கமலிடம் இந்தப் படத்தை பற்றி கேட்டால் எனக்கு தயாரிப்பாளர் ரெடியானால் படம் உடனே ரெடியாகிவிடும் என்ற பதிலை தான் சொல்லி இருக்கிறார். சமீபத்தில் விக்ரம் பட இசை வெளியீட்டு விழாவின் போது கூட நடிகர் சிம்பு இந்த படத்தைப் பற்றி பேசி இருந்தார்.

Also Read: திரைக்கு வராமலேயே எதிர்பார்ப்பை கிளப்பிய 4 திரைப்படங்கள்.. வருட கணக்கில் காக்க வைக்கும் மருதநாயகம்

தற்போது மருதநாயகம் படத்தை பற்றி ஒரு புதிய தகவல் ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதாவது மருதநாயகம் படத்தை நடிகர் கமலஹாசன் இயக்கி தயாரிக்க இருக்கிறார். ஆனால் அதில் ஹீரோவாக நடிக்க இருப்பது நடிகர் சிம்பு. இந்த விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது.

இது பற்றி அதிகாரப்பூர்வமாக எந்தவித அறிவிப்புகளும் வெளியாகவில்லை. ஆனால் கமலின் இயக்கத்தில் சிம்பு நடிப்பது என்பது கோலிவுடையே புரட்டிப் போட்டு விடும் என்பது மட்டும் உறுதி. சிம்பு மருதநாயகம் படத்தின் ஹீரோவாக நடித்தால் கண்டிப்பாக சிம்புவுக்கு சினிமாவில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து விடும்.

Also Read: மீண்டும் தூசி தட்டப்படுமா மருதநாயகம்.. வெளிப்படையாக கூறிய கமல்ஹாசன்

- Advertisement -spot_img

Trending News