சிவராத்திரி அன்று சிவனிடம் சென்ற மயில்சாமி.. கடைசி நிமிடங்களில் பேசிய நிறைவேறாத ஆசை

இன்று காலையிலேயே பெரும் துயர செய்தி ஒன்று வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்த நடிகர் மயில்சாமி இன்று மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாகவும் கலக்கி வந்த இவரின் மரணம் திரை உலகிற்கு பேரிழப்பாக இருக்கிறது.

நேற்று மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இவர் கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்றிருக்கிறார். அங்கிருந்து வீடு திரும்பும் வழியில் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மயில்சாமியின் உயிர் பிரிந்து விட்டது. இவரின் மரணத்திற்கு மனோபாலா, ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Also read: 100 படங்களுக்கும் மேல் நடித்து மக்கள் மனதில் நிரந்தரமாக குடியேறிய மயில்சாமி.. காலமானார்!

அது மட்டுமல்லாமல் மயில்சாமியின் இறப்பு எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் நடிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரின் இறுதி நிமிடங்கள் என்ன என்பது பற்றி டிரம்ஸ் மணி உருக்கமாக தெரிவித்துள்ளார். நேற்று சிவன் கோவிலில் டிரம்ஸ் மணியும் மயில்சாமி உடன் தரிசனம் செய்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் பூஜை ஆராதனையின் போது அவருடைய இசை கச்சேரியும் நடந்திருக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் மிகவும் பயபக்தியுடன் இருக்கும் மயில்சாமியை பார்த்து தற்போது பலரும் கண்கலங்கி வருகின்றனர். மேலும் டிரம்ஸ் மணி அப்போது மயில்சாமி தன்னிடம் என்ன பேசினார் என்பதையும் தெரிவித்திருக்கிறார்.

Also read: பையன் ஒரு மாதிரி, அவன் கூட தங்க வேண்டாம்.. மகளை கூப்பிட்டு கண்டித்த ரஜினி

அதாவது அவர் இந்த கோவிலுக்கு நான் விவேக் சாரை அழைத்து வந்திருக்கிறேன் அதேபோல் நீங்களும் வந்து விட்டீர்கள். ரஜினி சாரை மட்டும் அழைத்து வந்து அவருடைய கையால் சிவனுக்கு பாலாபிஷேகம் செய்துவிட்டால் போதும் என்று தெரிவித்திருக்கிறார். இப்படி ஒரு ஆசையுடன் மயில்சாமி நேற்று மிகவும் சந்தோஷமாக டிரம்ஸ் மணியிடம் பேசி இருக்கிறார்.

ஆனால் அவருடைய ஆசை நிராசையாகவே போய்விட்டது ரசிகர்களுக்கு சொல்ல முடியாத வேதனையை கொடுத்து வருகிறது. அது மட்டுமல்லாமல் சிவராத்திரி அன்று சிவனை மனம் உருகி வேண்டிய மயில்சாமி சிறிது நேரத்திலேயே சிவனடி சேர்ந்தது பலரின் மனதையும் கனக்க வைத்திருக்கிறது. தற்போது அவரின் மறைவுக்கு ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலையும், அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.

Also read: விஜய் சேதுபதி பெயரைக் சந்தி சிரிக்க வைத்த பிரபலம்.. கேடுகெட்ட வேலையை செய்த காமெடியன்