வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

திருமண நாளை லாக் செய்த டாடா கவின்.. பொண்டாட்டியாக போறவங்க இவங்கதான்

Actor Kavin: சரவணன் மீனாட்சி சீரியலின் வேட்டையன் கேரக்டர் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் நடிப்பாலும், அழகான தோற்றத்தாலும் ஈர்த்தவர் தான் நடிகர் கவின். அதன் பின்னர் பல வருட இடைவெளிக்குப் பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, முன்பிருந்த ரசிகர்களை விட பல மடங்கு ரசிகர்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெளியே வந்த பிறகு கவின் நடித்த லிப்ட் திரைப்படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பின்னர் டாடா என்னும் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் அவரை முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக கொண்டு வந்து இருக்கிறது. கவின் தற்போது தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக பெயர் வாங்கி இருக்கிறார்.

Also Read:கழட்டிவிட்ட லாஸ்லியா, அதிரடி முடிவெடுத்த டாடா கவின்.. பெரிய பெரிய விஷயத்தை எல்லாம் வாழ்க்கையே முடிவு செய்யுமாம்

தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக மாறி இருக்கும் கவின், தன்னுடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு தயாராகி இருக்கிறார். தமிழ் சினிமாவின் ஃபேவரிட் ஹீரோவான கவின் தன்னுடைய நீண்ட வருட காதலியை கரம் பிடிக்க இருக்கிறார். தற்போது இந்த திருமண செய்தி சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி கொண்டு இருக்கிறது.

கவின் நீண்ட வருடங்களாக மோனிகா என்னும் பெண்ணை காதலித்து வந்ததாகவும், வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி சென்னையில் இரு வீட்டார் முன்னிலையில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது கவினின் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.

Also Read:கோடிகளில் சம்பளத்தை உயர்த்திய டாடா பட கவின்.. மனசாட்சி இல்லையா என வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்

கவின் திருமணம் செய்ய போகும் இவர் தனியார் பள்ளி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய காதல் நீண்ட வருடங்களாக ரொம்பவும் ரகசியமாக இருந்திருக்கிறது. நடிகர் கவின் இன்னும் ஒரு சில தினங்களில் தன்னுடைய திருமண செய்தியையும், வருங்கால மனைவி மோனிகாவை பற்றியும் தன்னுடைய ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நடிகை லாஸ்லியாவை காதலித்து வந்தார். வெளியில் வந்த பிறகு இவர்கள் இருவரது காதலும் முடிவுக்கு வந்தது. ஆனால் அந்த வீட்டில் இருக்கும் பொழுதே கவின் தனக்கு ஒரு காதல் வெளியில் இருப்பதாகவும், ஆனால் இருவரும் பேசி நிறைய நாட்கள் ஆகிவிட்டதால் அது எந்த நிலையில் இருக்கிறது என்று கூட தெரியாது எனவும் சொல்லி இருந்தார். ஒரு வேளை அந்தப் பெண்தான் இந்த மோனிகாவாக கூட இருக்கலாம்.

Also Read:பேர், புகழ் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் 5 பிரபலங்கள்.. கவினுக்கு மூன்று மாதம் அடைக்கலம் தந்த விஜய் டிவி

- Advertisement -

Trending News