கழட்டிவிட்ட லாஸ்லியா, அதிரடி முடிவெடுத்த டாடா கவின்.. பெரிய பெரிய விஷயத்தை எல்லாம் வாழ்க்கையே முடிவு செய்யுமாம்

Actor Kavin: சீரியல்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் கவினுக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. அந்த நிகழ்ச்சியில் இவர் சில எதிர்மறை விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ரசிகர்கள் அவரை கொண்டாடத் தவறவில்லை. அதைத்தொடர்ந்து தற்போது லிப்ட், டாடா படங்களின் மூலம் இவர் கவனிக்கப்படும் நாயகனாகவும் மாறி இருக்கிறார்.

தற்போது கைவசம் சில படங்களை வைத்திருக்கும் கவின் கல்யாண மாப்பிள்ளை ஆக மாறப்போகிறாராம். இந்த விஷயம் பலருக்கும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. ஏனென்றால் இப்போது தான் அவருடைய மார்க்கெட் ஒரு ஸ்டெடியாக போய்க் கொண்டிருக்கிறது.

Also read: கோடிகளில் சம்பளத்தை உயர்த்திய டாடா பட கவின்.. மனசாட்சி இல்லையா என வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர் 

இந்த நேரத்தில் கல்யாணமா, பொண்ணு யாரு, லாஸ்லியாவோட காதல் அவ்வளவுதானா என பல கேள்விகள் இப்போது எழுந்து வருகிறது. ஆனால் உண்மையில் கவின், லாஸ்லியாவின் காதல் எப்போதோ முடிந்து போன ஒரு அத்தியாயமாக இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் உருகி உருகி காதல் வசனம் பேசி வந்த இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் லாஸ்லியா ஒரு படத்தில் நடிக்க ஆரம்பித்ததுமே ஏதோ லேடி சூப்பர் ஸ்டார் என்ற ரேஞ்சுக்கு அலப்பறை கொடுத்து வந்தார். அது மட்டுமல்லாமல் கவினின் காதலையும் சும்மா டைம் பாஸ் என்ற ரீதியில் கழட்டி விட்டார். இது பற்றி பல தகவல்கள் அப்போதே வெளிவந்தது. ஆனாலும் இது குறித்து கவின் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் தரவில்லை.

Also read: பட வாய்ப்பை இப்படித்தான் பயன்படுத்தணும் என நிரூபித்த 6 நடிகர்கள்.. அடுத்த சிவகார்த்திகேயனாக வரும் கவின்

ஆனால் நாம் நல்லா வாழ்வது தான் நம்மை வேண்டாம் என்று விட்டு சென்றவர்களுக்கு சரியான பதிலடி என்பதை அவர் நிரூபித்திருக்கிறார். அந்த வகையில் கவின் இந்த காதல் கத்திரிக்காய் எல்லாத்தையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு அப்பா, அம்மா சொன்ன பெண்ணையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறாராம். அந்த வகையில் இந்த மாத இறுதிக்குள் இவர்களுடைய திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை கவின் ரசிகர்களுக்கு அறிவிக்க இருக்கிறார். இப்படி பெரிய பெரிய விஷயங்களை எல்லாம் வாழ்க்கையே முடிவு செய்யும். அதுபோல் கவினின் திருமண வாழ்வு சிறப்பாக அமைய வேண்டும் என்றும் லாஸ்லியா இதை பார்த்து மிஸ் செய்து விட்டோமே என ஏங்க வேண்டும் எனவும் ரசிகர்கள் இப்போதே அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Also read: சீரியலில் நடித்த பின்பு படிப்படியாக முன்னேறி சினிமாவிற்கு வந்த 5 ஆர்டிஸ்ட்கள்.. வெள்ளி திரையில் ஜொலிக்கும் கவின் பிரியா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்