5 படங்களை தவற விட்டு கதறி அழும் ஜெய்.. ஒரு படம் நடித்திருந்தால் கூட கேரியரை காப்பாற்றி இருக்கலாம்

Actor Jai: திரை உலகில் படங்கள் நடித்து ஃபேமஸ் ஆவார் என்று பார்த்தால், மீம்ஸ் ரோல்களிலும் சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாக இருப்பவர்தான் ஜெய்.தேடி வந்த வாய்ப்புகளில் ஏதாவது ஒரு படமாவது நடித்திருந்தால் கூட தனது கெரியரை காப்பாற்றிக் கொண்டு இருக்கலாம். அப்படி ஜாக்பாட் ஆக அமைந்த படங்களை தவறவிட்டிருக்கிறார். இவர் தனது கேரியரில் அப்படி தவறவிட்ட சில படங்களை பார்க்கலாம்.

சிவா மனசுல சக்தி: 2019-ல் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த சிவா மனசுல சக்தி ரொமான்டிக் காமெடி திரைப்படம் ஆகும். இதில் ஜீவாக்கும் முன்பே ஜெயிக்கு தான் ஹீரோவாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் சுப்ரமணியபுரம் படத்தில் பிசியாக இருப்பதால் இத்திரைப்படம் என்னால் நடிக்க முடியாது என்று அந்த வாய்ப்பை தவற விட்டு விட்டார். இது ஜீவாவின் கேரியரில் ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

Also Read:மேடை நாகரிகம் தெரியாமல் திமிராக பேசும் மன்சூர்.. அவரைப்போவே இருக்கும் கண்ணாடி நடிகர்

நாடோடிகள்: இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் 2009ல் வெளியான படம் நாடோடிகள். இத்திரைப்படத்தில் சசிகுமார், விஜய் வசந்த், பரணி போன்றோர் நடித்துள்ளனர். சுப்பிரமணியபுரம் படத்திற்காக தாடி எல்லாம் வளத்திருக்கிறேன் என்று சொல்லி மறுத்துவிட்டார் . இத்திரைப்படம் மாபெரும் கமர்சியல் வெற்றி அடைந்தது.

விண்ணைத்தாண்டி வருவாயா: கௌதம் மேனன் இயக்கத்தில் 2010ல் ரொமான்டிக் திரைப்படமாக வெளிவந்தது விண்ணைத்தாண்டி வருவாயா. இதில் சிலம்பரசன், திரிஷா கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருந்தது. சிம்புவிற்கு முன்பே இந்த வாய்ப்பு ஜெய்க்கு கிடைத்தது. வழக்கம் போல இந்த வாய்ப்பையும் கோட்டை விட்டு விட்டார்.

Also Read:லோகேஷ், லியோவுக்கே கண்டிஷன் போடும் அனிருத்.. பேராசையால் ஆடும் ஆட்டம்

ராட்சசன்: 2018 ராம்குமார் இயக்கத்தில் சைக்கோ திரில்லர் திரைப்படமாக வெளிவந்தது ராட்சசன். இது விஷ்ணு விஷாலுக்கு கேரியரில் ஒரு கம்பேக் திரைப்படமாகவே அமைந்தது. முதலில் வாய்ப்பு நடிகர் ஜெய்க்கு கிடைத்தும், இந்த கதையும் எனக்கு பிடிக்கவில்லை என சொல்லி ரிஜெக்ட் செய்து விட்டார்.

போடா போடி: 2012 ல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ரொமான்டிக் திரைப்படம் போடா போடி. சிம்பு, வரலட்சுமி சரத்குமார் கூட்டணியில் வெளியாகி தெறிக்க விட்டது. இந்த படத்தின் வாய்ப்பை கூட இவர் தவற விட்டுவிட்டு தான் கெரியருக்கு மொத்தமாகவே சூனியத்தை வைத்து விட்டார். தற்போது தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட நிலைமையில் இருக்கிறார்.

Also Read:175 நாள் ஓடிய சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நடிக்க மறுத்த ஹீரோ.. காரணம் கேட்டு அதிர்ந்து போன பாரதிராஜா.