லோகேஷ், லியோவுக்கே கண்டிஷன் போடும் அனிருத்.. பேராசையால் ஆடும் ஆட்டம்

Lokesh-Aniruth: இப்போது டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸாக இருக்கும் ஒரே இசையமைப்பாளர் அனிருத் மட்டும் தான். அந்த அளவுக்கு இவர் தற்போது ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட பலரையும் ஓரங்கட்டி முன்னேறிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவருடைய ஆட்டமும் சமீப காலமாக கொஞ்சம் ஓவராகவே இருக்கிறதாம்.

அதிலும் லியோவுக்கே இவர் கண்டிஷன் போட்டிருப்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது. அண்மையில் இவருடைய இசையில் வெளிவந்த ஜெயிலர், ஜவான் உள்ளிட்ட படங்கள் பட்டையை கிளப்பியது. அதில் காவாலா, தலைவர் அலப்பறை போன்ற பாடல்கள் மீடியாவையே கதி கலங்க வைத்தது.

Also read: பெரிய தலைகளின் பேச்சை கேட்டு ஆடும் அனிருத்.. நண்பனையே கழட்டிவிட்ட சம்பவம்

அதேபோன்று ஜவான் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த இவருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் மூலம் அடுத்தடுத்த படங்களுக்கான பேச்சுவார்த்தையும் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் மேலாக லியோ, இந்தியன் 2, விடாமுயற்சி என பல படங்கள் இவர் கைவசம் இருக்கிறது.

அதில் லியோ அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. ஆனால் முதல் பாடல் வெளிவந்த பிறகு இரண்டாம் பாடலுக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இதற்காகவே காத்திருக்கும் விஜய்யின் ரசிகர்கள் எப்போது தான் செகண்ட் சிங்கிள் வெளியாகும் என்று சோசியல் மீடியாவில் கதறிக் கொண்டிருக்கின்றனர்.

Also read: அங்க வச்சா நான் தான் சாகணும்.. லலித்திடம் சண்டை போட்ட தளபதி, இன்னுமா ஒரு முடிவுக்கு வரல

ஆனால் அனிருத் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ரூல்ஸ் பேசிக் கொண்டிருக்கிறாராம். அதாவது அக்ரிமெண்ட் படி பாடலை முடித்துக் கொடுப்பதற்கு ஆறு மாத காலம் அவருக்கு அவகாசம் தரப்பட்டிருக்கிறது. அதனால் எனக்கு டைம் இருக்கு அப்படின்னு வாய்ச்சவடால் பேசுகிறாராம்.

படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் இவருடைய அக்கப்போர் தயாரிப்பாளருக்கு பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது. ஆக மொத்தம் புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்குமுன்னு நான் கனவா கண்டேன் அப்படின்னு லோகேஷ், விஜய் இருவரும் டென்ஷனில் இருப்பதாக ஒரு தகவல் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

Also read: மேடை நாகரிகம் தெரியாமல் திமிராக பேசும் மன்சூர்.. அவரைப்போவே இருக்கும் கண்ணாடி நடிகர்

- Advertisement -