175 நாள் ஓடிய சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நடிக்க மறுத்த ஹீரோ.. காரணம் கேட்டு அதிர்ந்து போன பாரதிராஜா

Bharathi Raja – Kamal Haasan: பாரதிராஜா என்றாலே அவர் மண்வாசம் சார்ந்த கதைகளை தான் இயக்குவார் என்பதை மாற்றிய படம் தான் சிகப்பு ரோஜாக்கள். இப்போது வெளியாகும் பிளேபாய் படங்கள் மற்றும் சைக்கோ கில்லர் படங்களுக்கு முன்னோடியே இந்த படம் தான். அந்த காலத்திலேயே பெண்களுக்கு எதிரான நெகட்டிவ் ஷேடில் கதை எடுத்து, அந்த படம் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது என்றால் அது இந்த படம் தான்.

முழுக்க முழுக்க திரில்லராக, கொலை நடுங்கும் கிளைமாக்ஸ் காட்சியை வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் கமலஹாசன் தான் நெகட்டிவ் ஹீரோவாக நடித்திருந்தார். இவருடைய ஜோடி ஸ்ரீதேவி. இன்று வரை சிகப்பு ரோஜாக்கள் படத்தின் பங்களா மற்றும் அதில் வரும் கருப்பு பூனையை பார்த்தாலே பயமாக இருக்கும். அந்த அளவுக்கு மிரட்டி விட்டிருப்பார் இயக்குனர்.

Also Read:1000 கோடி பட்ஜெட்டில் கமல் கைவசம் இருக்கும் 4 படங்கள்.. உலகநாயகனுக்கே ட்ரெய்னிங் கொடுக்கும் ஹெச்.வினோத்

அந்த காலத்து சாக்லேட் பாய் கமலஹாசன் கோட் சூட் போட்டு, நவநாகரீக உடை அணிந்து பெண்கள் பார்த்ததுமே மயங்கும் அழகுடன் படம் முழுக்க வலம் வருவார். இவர் காதலில் விழும் பெண்கள் அத்தனை பேருக்கும் அடுத்து மரணம் என்பது தான் படத்தின் கதை, இருந்தாலும் ஹீரோயின் ஸ்ரீதேவியை மட்டும் உண்மையாகவே விரும்பி திருமணம் செய்து கொள்வார்..

சின்ன வயதில் பெண்களால் இவருக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவம் தான் இவரை அப்படி ஒரு சைக்கோ கில்லர் ஆக மாற்றி விடும். இந்த படத்தில் இந்த கேரக்டருக்கு கமல் கனக்கச்சிதமாக பொருந்தி இருந்தாலும் பாரதிராஜாவின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் நடிகர் சிவகுமார் தானாம். ஆனால் சிவக்குமார் கதையை கேட்டுவிட்டு இதுபோன்ற நெகட்டிவ் ரோல்களில் நான் நடிப்பதற்கு விரும்பவில்லை என்று சொல்லி ரிஜெக்ட் செய்து விட்டாராம்.

Also Read:கமலை வைத்து ரஜினியை சுளுக்கு எடுக்கும் ப்ளூ சட்டை.. நாயகன் படத்தால் சூப்பர் ஸ்டாருக்கு ஏற்பட்ட பீதி

கமலுக்கு சினிமா என்பது சோதனை கூடம் தான். அதனால் வந்த வாய்ப்பை அல்வா போல் தூக்கி இருக்கிறார். ஒருவேளை இந்த கேரக்டரில் சிவகுமார் நடித்திருந்தால் அது கமல் அளவுக்கு மக்களிடையே எடுபட்டு இருக்குமா என தெரியவில்லை. சிவக்குமார் இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதற்கு பயந்ததற்கு முக்கியமான காரணமும் ஒன்று இருக்கிறது.

அதற்கு முந்தைய வருடம் ரிலீஸ் ஆன புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் வித்தியாசமாக வில்லன் கேரக்டரை முயற்சி செய்திருந்தார் சிவக்குமார். ஆனால் அது மக்களிடையே எடுபடாமல் போய்விட்டது. அதன்பின்னர் அவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்து கொண்டே போனதால் இனி நெகட்டிவ் கேரக்டரே பண்ண வேண்டாம் என்று தான் அவர் சிகப்பு ரோஜாக்கள் படத்தை ரிஜெக்ட் செய்திருக்கிறார்.

Also Read:இந்த ஸ்டைலில் படம் பண்ணுங்க.. கமல் வார்த்தையால் எரிச்சலான ஹெச்.வினோத்

Next Story

- Advertisement -