கை உடைஞ்சாலும் வெற்றிக்காக போராடும் அருண் விஜய்.. டாப் ஹீரோக்கள் பார்த்து கத்துக்கோங்க!

Actor Arunvijay is celebrating his film Mission Chapter one success with his fans: நட்சத்திர அந்தஸ்துடன் ஈகோ இல்லாமல் ரசிகர்களுடன் சகஜமாக பழகும் அருண் விஜய்யை அவரது ரசிகர்கள், மக்கள் என அனைவரும் கொண்டாடத் துவங்கியுள்ளனர். தற்போது வெளிவந்திருக்கும் மிஷன் சாப்டர் ஒன் வெற்றியை ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து ஒன்றாக கொண்டாடி வருகின்றார் அருண் விஜய்.

விஜயகுமாரின் மகன் என்று அடையாளம் காணப்பட்ட அருண்குமார் என்கிற அருண் விஜய் “முறை மாப்பிள்ளை” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். வயது என்பது  எண்ணிக்கையில் மட்டுமே உள்ளது என்று நிரூபித்து இன்றும் இளமை மாறாது தோற்றத்துடன் வலம் வரும் அருண் விஜய் குறைவான படங்களில் மட்டுமே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2015 இல் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அஜித் மற்றும் கௌதம் கொடுத்த வாய்ப்பை சரியாக யூஸ் பண்ணி கொண்டு உள்ளார்.  இப்படத்தின் விக்டர் கதாபாத்திரம் இன்றளவும் பேசப்படுவதற்கு இவரது திறமையான நடிப்பே காரணம்.  இப்படத்திற்காக  நார்வே தமிழ் திரை உலக விழாவில் சிறந்த வில்லன் விருதை வாங்கினார் அருண் விஜய்.

Also read: குடும்பங்கள் கொண்டாடிய மிஷன் சாப்டர் ஒன்.. அயலான் மில்லரை தகர்த்தெறிந்த அருண் விஜய்யின் தந்திரம்

தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இளம் தலைமுறையினருக்கு பயிற்சி அளிக்கும் அருண் விஜய் சத்தம் இல்லாமல் மாஸ் ஹீரோவாக வலம் வரும் தனது ஆசையை நிறைவேற்றி வருகிறார்.  25 வருடம் நடித்து இப்போது தான் டாப் 5 ஹீரோ லிஸ்டில் வந்துள்ளார். இப்போ பொங்கலுக்கு ரிலீசான மிஷன் சத்தமில்லாமல் வசூலில் சாதனை செய்து வருகிறது.

அருண் விஜய்க்கு பெரிய ஹீரோவுக்கு வைக்கும் கட்அவுட் வைத்துள்ளனர்.  இவருக்கு என்று ரசிகர்கள் உருவாகி வந்து கொண்டிருக்கின்றனர்.  பாலாவின் வணங்கான் படம் வெளிவரும் பட்சத்தில் கண்டிப்பாக தனுஷ், சிம்பு அளவிற்கு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொள்வார் என்பது உறுதி.

தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் உடனே அமைந்த  அருண் விஜய்க்கு, இயற்கை, தடையறத் தாக்க, மலை மலை, யானை,தடம், என்னை அறிந்தால் போன்றவை இவருக்கு திருப்புமுனையை கொடுத்தது. துவண்டு விடும் தோல்வியிலும் இது மாதிரி ஹீரோவா கண்டினியூவா 25 வருஷம் நடிச்சு இந்த பிளேஸ்க்கு வர்றது இவர்தான் ஃபர்ஸ்ட். மிஷன் சாப்டர் ஒன் மூலமாக  அருண் விஜய் திரை துறையில் தனது அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்து விட்டார் என்றே சொல்லலாம்.

Also read:  விஜயகாந்த் பாணியை பின்பற்ற போகும் அருண் விஜய்.. கேப்டன் சமாதியில் எடுத்த தில்லானா சபதம்

- Advertisement -spot_img

Trending News