வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

காதலிக்காக எடுத்த புது அவதாரம்.. வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுத்த அமீர் – பாவனி

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல ஆதரவு இருந்து வருகிறது. அதனாலேயே அதில் கலந்து கொள்ள பல பிரபலங்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அடையாளத்தை கொடுக்கிறது.

அப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான ஜோடி தான் அமீர், பாவனி. போட்டியாளர்களாக சந்தித்துக் கொண்ட இவர்கள் இருவரும் தற்போது காதலர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். மேலும் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையிலும் இவர்கள் கால் பதித்துள்ளனர்.

Also read: குக் வித் கோமாளி சீசன் 4 இந்த வாரம் வெளியேறும் நபர்.. அப்ப வின்னர் உறுதியாக இவங்க தான்

இந்நிலையில் அமீர் தன் காதலிக்காக புது அவதாரம் ஒன்றை எடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அவர் இப்போது இயக்குனராக மாறி இருக்கிறார். இதற்கான பூஜை நேற்று விமரிசையாக நடைபெற்றது. அதில் அமீர், பாவனி இருவரும் ஜோடியாக கலந்து கொண்ட போட்டோக்கள் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.

அமீர் – பாவனி பட பூஜை

amir-pavni
amir-pavni

ரொமான்டிக் மற்றும் காமெடி கலந்து எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில் அமீர், பாவனி ஜோடியுடன் மன்சூர் அலிகான், விடிவி கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். ஷபீர் சுல்தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் படம் வெற்றி பெற வேண்டும் என்று இப்போதே வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Also read: சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் ஹீரோ.. பாலிவுட்டில் நடிகராக முத்திரை பதித்து வரும் விஜய் தம்பி

ஒரு சிலர் கல்யாணம் எப்ப என்றும் இந்த ஜோடியிடம் கேட்டு வருகின்றனர். ஏற்கனவே பாவனி சினிமாவில் எதையாவது சாதித்து விட்டு தான் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறியிருந்தார். அதன் முதல் படியாக தான் இப்போது இந்த ஜோடி புது படத்தில் இணைந்திருக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் இருந்து வந்த இவர்களுக்கும் ரசிகர்களின் ஆதரவு இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

காதலிக்காக இயக்குனர் அவதாரம் எடுத்த அமீர்

pavni-amir-movie-pooja
pavni-amir-movie-pooja

ஏனென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் கவின் சினிமாவில் ஹீரோவாக ஜெயித்திருக்கிறார். தற்போது அவருடைய வழியில் அமீர், பாவனி இருவரும் களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் காதலிக்காக இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் அமீரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Also read: கொஞ்ச, நெஞ்ச பேச்சாடா பேசுன.. டைட்டில் வின்னராக இருந்தும் வாய்ப்புக்காக அலையும் பிக்பாஸ் பிரபலம்

- Advertisement -

Trending News