விஜயாவை தூண்டிவிட்டு அவமானப்படுத்திய ரோகினி.. அம்மாவை குஷிப்படுத்தி கூட்டணி போட்ட முத்து மீனா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில் ரோகினி, தினேஷ் ரொம்ப டார்ச்சர் பண்ணியதால் லோக்கல் ரவுடி சிட்டி இடம் கொஞ்சம் தட்டி வைக்க சொன்னார். அதனால் சிட்டி, தினேஷை கூப்பிட்டு மிரட்டும் பொழுது தினேஷ் அவரிடம் இருந்து தப்பித்து போகும் வழியில் ஒரு முதியவரை தள்ளிவிட்டு போய்விட்டார். இதனை பார்த்த முத்து அந்த தினேஷை பிடித்து அங்க வந்த போலீஸிடம் ஒப்படைத்து விட்டார்.

அப்பொழுது தினேஷை போலீஸ் கூட்டிட்டு போகும் பொழுது அதை மறைந்திருந்து சிட்டி போட்டோ எடுத்து ரோகினிக்கு அனுப்பி வைக்கிறார். அந்த போட்டோவை பார்த்த ரோகினி, இனி இந்த தினேஷால் நமக்கு பிரச்சனை வராது என்று சந்தோஷப்பட்டு கொள்கிறார். பிறகு வீட்டு வேலைகள் அனைத்தையும் விஜயா செய்து புலம்பிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் விஜயாவின் தோழியும் வருகிறார்.

திருந்தாத விஜயாவை ஏமாற்றும் ரோகினி

வழக்கம் போல் அவரிடம் மீனாவை பற்றி குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு மீனாவை தேடிக்கொண்டு பூ வாங்குவதற்காக விஜயா வீட்டுக்கு ஒரு நபர் வருகிறார். அவரிடமும் தேவையில்லாமல் விஜயா பேசி வாய கொடுத்து வம்பை வாங்கிக் கொண்டார். அந்த நேரத்தில் மீனாவும் ரோகிணியும் வீட்டிற்கு வரும் பொழுது மீனாவை வெளியே நிற்க வைத்து விஜயா திட்டுகிறார்.

என்னமோ இவ ஒருத்தி மட்டும் தான் வேலைக்கு போற மாதிரியும் வீட்டு வேலையை பார்க்காமல் இஷ்டத்துக்கு அலைந்து கொண்டு இருக்கிறாள். இனி வேலைக்கு எல்லாம் போக வேண்டாம் என்று மீனாவை சொல்கிறார். உடனே விஜயாவின் தோழி அது எப்படி மீனா வேலைக்கு போகாம இருக்க முடியும். உனக்கு வீட்டில் இருக்க பிடிக்கவில்லை என்றால் நீயும் வேலைக்கு போ என்று சொல்கிறார்.

உடனே விஜயா, ரோகினிடம் நான் இனி உன்னுடன் சேர்ந்து பார்லருக்கு வருகிறேன். அங்கு வந்து ஏதாவது வேலை பார்க்கிறேன் என்று சொல்லிய நிலையில் ரோகிணி அங்கெல்லாம் நீங்க வந்து என்ன பண்ண போறீங்க அதெல்லாம் வேண்டாம் என்று சொல்கிறார். அதற்கு விஜயா அப்படி என்றால் மனோஜ் ஷோரூம் கடைக்கு வந்து கல்லாப்பெட்டியில் உட்கார்ந்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார்.

ஆனால் இது பிடிக்காத ரோகிணி, விஜயாவை திசை திருப்பும் விதமாக உங்களுக்கு தான் பரதநாட்டியம் நன்றாக தெரியும்ல. அதை சொல்லிக் கொடுக்கும் விதமாக பரதநாட்டியம் கிளாஸ் நடத்துங்கள் என்று விஜயாவிடம் ஆசை வார்த்தை காட்டுகிறார். அதற்கு நான் எல்லா ஏற்பாடுகளையும் பண்ணுகிறேன் என்று சொல்லிய நிலையில் விஜயாவின் தோழி வீட்டில் வைத்து எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு பண்ணுகிறார்கள்.

அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடைபெற்ற நிலையில் விஜயாவின் தோழி வீட்டில் விஜயா அனைத்து ஏற்பாடுகளையும் பண்ணி காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பரதநாட்டியம் கற்றுக்கொள்ள யாரும் வராததால் அவமானப்பட்டு நிற்கிறார். இதனால் அம்மாவின் கஷ்டத்தை போக்கும் விதமாக முத்து மற்றும் மீனா இருவரும் சேர்ந்து நாம் பரதநாட்டிய கற்றுக் கொள்ளலாம் அம்மாவை மகிழ்விக்கலாம் என்று விஜயாவின் தோழி வீட்டுக்கு போகிறார்கள்.

இவர்களை பார்த்ததும் விஜயா உங்களுக்கெல்லாம் நான் சொல்லிக் கொடுக்க முடியாது என்று இருக்கிறார். பிறகு நாங்களே ஆடுவோம் நீங்கள் சரியா என்று பாருங்கள் என்பதற்காக முத்து, மீனா மற்றும் விஜயாவின் தோழிகள் ஆடுகிறார்கள். இதை பார்த்ததும் விஜயா இப்படி ஆடக்கூடாது என்று அவர்களுக்கு பரதநாட்டியம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்து விடுகிறார். ஆக மொத்தத்தில் விஜயா எப்போதெல்லாம் மன கஷ்டத்தில் இருக்கிறாரோ, அப்பொழுது அம்மாவை சந்தோஷப்படுத்தும் விதமாக முத்து ஏதாவது ஒரு விஷயத்தை செய்து குஷிப்படுத்தி விடுகிறார்.

சிறகடிக்கும் சீரியலின் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -